மேலும் அறிய

கும்பகோணத்தில் கடன் தொல்லையால் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

தற்கொலை காரணம் யாராவது நெருக்கடி கொடுத்தார்களா, மிரட்டினார்களா கிழக்கு போலீஸார் விசாரணை

கும்பகோணத்தில் தொழிலில் ஏற்பட்ட கடன் தொல்லையால் கணவன் - மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கும்பகோணம் நாணயக்கார தெருவை சேர்ந்தவர் அருணாசலம் மகன் மோகன் (55) நகைத் தொழில் செய்பவர். இவரது மனைவி ஜெயசுதா (49). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. மோகன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் நாணயக்கார தெருவுக்கு வாடகைக்கு குடி வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக நகைத் தொழில் செய்து வந்த நிலையில், மோகன் கடந்த சில ஆண்டுகளாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.  இதனால் மோகனுக்கு பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது தொழிலையும் சரிவர செய்யமுடியவில்லை. இதன் காரணமாக குடும்ப செலவுக்கு நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.

கும்பகோணத்தில் கடன் தொல்லையால் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலையில் மோகனும், ஜெய்சுதாவும் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளனர். ஆனால் பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்ய தொடங்கினர். இதே போல் நகைகளை கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் தான் அவமானப்பட்டு விடுமோ என்று நிலையில், 22 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்த மோகனின் நண்பர்கள் 2 பேர் மோகன் வீட்டுக்கு வந்துள்ளனர்.

கும்பகோணத்தில் கடன் தொல்லையால் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

வீட்டு வாசலில் இருந்து 2 பேரும் மோகனை பெயர்சொல்லி கதவைத் திறக்குமாறு அழைத்துள்ளனர். வெகுநேரமாகியும் மோகன் வீட்டு கதவு திறக்காததால சந்தேகமடைந்த மோகனின் நண்பர்கள் வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் தகவல் சொல்லியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி   கும்பகோணம் கிழக்கு போலீஸில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர்கள் அழகேசன், மகாலட்சுமி மற்றும் போலீஸார் கதவை திறந்து பார்த்தபோது மோகன் மற்றும் அவரது மனைவி ஜெயசுதா இரண்டு பேரும், வீட்டில் இருந்த புடவையை சுவரில் மாட்டி ஒரே அறையில் தூக்கில்  தொங்கியது தெரியவந்தது.

கும்பகோணத்தில் கடன் தொல்லையால் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில் மோகன் வீட்டருகே வசித்தவர்கள் சம்பவம் பற்றி மோகனின் சகோதரி சுமித்ராவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சுமித்திரா தூக்கில் தொங்கிய அண்ணன் மோகன், அண்ணி ஜெயசுதா இருவரையும் பார்த்து கதறி அழுதார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து சுமித்ரா கும்பகோணம் கிழக்கு போலீஸூக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் மோகன் மற்றும் ஜெய்சுதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை காரணம் யாராவது நெருக்கடி கொடுத்தார்களா, மிரட்டினார்களா கிழக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

பிரமாண்ட மறுதிறப்பு... தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் அட்டகாசமான சிறப்பு சலுகைகள்
பிரமாண்ட மறுதிறப்பு... தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் அட்டகாசமான சிறப்பு சலுகைகள்
சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்... விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல்
சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்... விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தல்
மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
காவல் துறையில் களையெடுப்பு... இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்: பின்னணி என்ன?
காவல் துறையில் களையெடுப்பு... இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்: பின்னணி என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
முழு சார்ஜில் 700 கி.மீ ரேஞ்ச், அறிமுகமாகும் Volvo EX90, ES90 ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்கள்!
முழு சார்ஜில் 700 கி.மீ ரேஞ்ச், அறிமுகமாகும் Volvo EX90, ES90 ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்கள்!
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
Embed widget