மேலும் அறிய

வெப்பமும் குறட்டை நோயும்... மாடு வளர்ப்போருக்கு இரட்டைச் சவால்: தீர்வு என்ன?

மூக்கில் வடியும் சீழ் மற்றும் சாணத்தை கால்நடை நோய் பரிசோதனை மையத்தில் பரிசோதித்து, நோயை உறுதிசெய்ய முடியும். கோடை காலங்களில் இந்த நோய் வராமல் தடுப்பது முக்கியமாகும்.

தஞ்சாவூர்: கோடை காலம் வந்து விட்டாலே கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். முக்கியமாக மாடுகள் வளர்ப்பவர்களுக்கு பால் உற்பத்தி குறைதல் என்பது மிகப்பெரிய பிரச்சினை ஆகும். இதற்கு காரணம் மாடுகளில் பரவும் 'குறட்டை நோய்' என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கோடை காலங்களில் நீர் தட்டுப்பாடு காரணமாக மாடுகள் ஒரே குளம் நீரைப் பயன்படுத்தும் போது குறட்டை நோய் (மூக்குப்புழு நோய்) பரவும் அபாயம் அதிகரிக்கிறது. கோடைக்காலத்தில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் நீர் தட்டுப்பாடு காரணமாக, மாடுகளைப் பாதிக்கும் 'குறட்டை நோய்' எனப்படும் மூக்குப்புழு நோய் தாக்குதல் கால்நடை வளர்ப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நோய் மாடுகளின் சுவாசப் பாதையைத் தாக்கி, நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கோடைகாலத்தில் நீர் நிலைகள் வற்றி வருவதால், கால்நடைகள் அனைத்தும் பொதுவான ஓரிடத்தில் நீர் அருந்தும் சூழல் ஏற்படுகிறது. இந்நோய் நேரடியாகப் பரவாமல், ஒரு சுழற்சி முறையில் பரவுகிறது. நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் சாணத்தில் உள்ள முட்டைகள் நீரில் கலந்து, அங்குள்ள நத்தைகளில் தங்கிப் புழுக்களாக வளர்கின்றன. மாடுகள் அந்த அசுத்தமான நீரைக் குடிக்கும்போது, இப்புழுக்கள் தோல் அல்லது மூக்கின் வழியாக உடலுக்குள் நுழைகின்றன. பின்னர் ரத்த ஓட்டத்தின் வழியாகப் பயணம் செய்து, இறுதியாக மூக்கின் உட்பகுதியைச் சென்றடைந்து பாதிப்பை உண்டாக்குகின்றன.

மாடுகளில் குறட்டை நோய் ஆரம்பத்தில் சாதாரண சளி போன்ற தொற்றுக்குறியுடன் தோன்றும். பின்னர் தொடர்ந்து மூக்கில் நீர் வடிதல், சீழ் அல்லது ரத்தம் கலந்த சளி வடிதல், மூக்கில் துர்நாற்றம், சுவாசிக்க சிரமம், மூச்சு விடும்போது குறட்டை போன்ற சத்தம், மூக்கின் உட்பகுதியில் சதை வளர்ச்சி போன்ற அறிகுறிகள் காணப்படும். சில நேரங்களில் சதை வளர்ச்சி மூக்குத்துவாரத்தில் அடைப்பு ஏற்படுத்தி தீவனம் சரிவர உண்ணாமை, உடல் எடை குறைதல், பால் உற்பத்தி குறைவு, சோர்வு மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

மாடுகளுக்கு ஏற்படும் அறிகுறிகளின் மூலம் மற்றும் மூக்குப் பகுதியை மருத்துவ பரிசோதனை செய்து, மூக்கில் சதை வளர்ச்சி இருப்பதை கண்டறியலாம். மூக்கில் வடியும் சீழ் மற்றும் சாணத்தை கால்நடை நோய் பரிசோதனை மையத்தில் பரிசோதித்து, நோயை உறுதிசெய்ய முடியும். கோடை காலங்களில் இந்த நோய் வராமல் தடுப்பது முக்கியமாகும். மாடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். நீர் தேங்கி இருக்கும் குளங்கள் மற்றும் குட்டைகளில் மாடுகளை நீர் குடிக்க விடக்கூடாது.

குளங்களில் நத்தைகளை கட்டுப்படுத்த சுண்ணாம்பு தூளை பயன்படுத்தலாம். கோடை காலங்களில் மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி குடற்புழு நீக்க மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். கோடைகாலத்தில் இந்நோய் பரவாமல் தடுக்கப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தட்பவெப்பநிலை மற்றும் சுகாதாரமற்ற குடிநீர் ஆகியவையே இந்நோய் பரவ முக்கியக் காரணிகளாக இருக்கிறது. எனவே கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளின் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மாடுகள் பராமரிப்பில் செய்யப்படும் சிறு தவறுகள் கூட அவற்றை வெகுவாக பாதித்து விடும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு கால்நடைத்துறை அளிக்கும் ஆலோசனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Embed widget