மேலும் அறிய
Advertisement
தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் நாகைதான் முதலிடம் - சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
மாநில சாராசரியைவிட அதிக அளவு தடுப்பூசியை செலுத்திய மாவட்டமாக நாகை உள்ளது - சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
நாகை மாவட்டம் ஒரத்தூரில் ரூ.366.35 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நிறைவு பெற்றன. இந்த கட்டடத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கடந்த மாதம் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அப்போது நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்காக அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனிஷ்குமார் என்ற மாணவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் அலை ஏறும்போது எல்லோரும் பயம், அச்சம் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். அலை சற்று குறைந்த பிறகு மக்கள் அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை. அரசு காட்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது இல்லை. தடுப்பூசி செலுத்திக்கொள்வது இல்லை.
ஒவ்வொரு நாளும், வாரந்தோறும் தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்பட்டு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை 9.67 கோடி தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயதுவரை உள்ளவர்களுக்கு இதுவரை 26 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 80 சதவீதம் ஆகும். இரண்டாம் தவணையாக 5.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இது 16.34 சதவீதம் ஆகும். அதே போல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 5.25 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது-. இது 90.78 சதவீதம் ஆகும். இரண்டாம் தவணையாக 4 கோடியே 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 70 சதவீதம் ஆகும். இரண்டாம் தவணை தடுப்பூசி ஒருகோடி பேர் போடவில்லை.
இது குறித்து கேட்டால் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துவிட்டது என கூறுகிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொண்ட உடனே நோய் எதிர்ப்பு சக்தி வராது. 2 வாரத்திற்கு பிறகுதான் எதிர்ப்பு சக்தி வரும். பூஸ்டர் தடுப்பூசி 34 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 7.17 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்னுரிமை பெற்றுள்ளனர்.
இதில் இதுவரை 4.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே பூஸ்டர் தடுப்பூசியும் போடப்படுகிறது. தடுப்பூசிகளை போட மக்கள் தானாக முன்வரவேண்டும். நாகை மாவட்டத்தில் முதல் தவணையாக 84 சதவீதமும், இரண்டாம் தவணையாக 75 சதவீதமும் தடுப்பூசி செலுத்தி மாநில சாராசரியைவிட அதிக அளவு தடுப்பூசியை செலுத்திய மாவட்டமாக நாகை உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் விதிகளை மீறியதாக 60 லட்சம் பேருக்கு ரூ.110 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை நான் பெருமையாக சொல்லவில்லை. வேதனையுடன் சொல்கிறேன். வெளியில் செல்லும்போதும், கூட்டமாக இருக்கும் இடங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை அதிகாரிகள் வற்புறுத்தாமல் தாமாகவே முகக்கவசம் அணிய வேண்டும். அதேபோல் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
நோய்த்தடுப்பு மற்றும் நோயை வராமல் தடுக்க பொதுமக்கள் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்த முன்வரவேண்டும். விழிப்புணர்வுகள் பழக்கவழக்கமாக மாற வேண்டும்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion