மேலும் அறிய
Advertisement
அரசு வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு ஜகா வாங்கிய பெண்...! - தாயை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்
குடும்பத்தோடு தலைமறைவானவர்கள் வீட்டை காலி செய்து பொருட்களை எடுத்துச் செல்லும் போது தீபாவின் தாய் மற்றும் சகோதரரை கிராம மக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வேலை வாங்கித் தருவதாக போலி பெண் அரசு ஊழியர் பல லட்சம் மோசடி: குடும்பத்தோடு தலைமறைவானவர்கள் வீட்டை காலி செய்து பொருட்களை எடுத்துச் செல்லும் போது தீபாவின் தாய் மற்றும் சகோதரரை கிராம மக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சங்கமங்கலம் அடுத்த பழையனூரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் லலிதா தம்பதியரின் மகள் தீபா இவருக்கு பார்த்தசாரதி என்ற சகோதரன் உள்ளார். தீபாவுக்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபுவுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தீபா சொந்த ஊரான பழையனூரில் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரிவதாக பலரிடம் கூறி நம்பகத் தன்மையை வளர்த்து வந்த இவர் வெளியே செல்லும் போதெல்லாம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு அரசு என அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டபடி சென்று வந்துள்ளார்.
அரசு பணியில் ஆல் எடுப்பதாகவும் நான் பரிந்துரை செய்யும் நபரை அரசு பணியில் சேர்த்துக் கொள்வார்கள் அதற்கு பணம் கொடுக்க வேண்டுமெனகூடி பல்வேறு நபர்களிடம் இலட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளார்.பணம் கொடுத்தவர்கள் வேலை குறித்து தொடர்ந்து கேட்கும்போதெல்லாம் அதிகாரிகளிடம் பணம் கொடுத்து உள்ளேன் விரைவில் பணி நியமன ஆணை வந்து விடும் என தொடர்ச்சியாக தெரிவித்துள்ளார் 10 மாதங்கள் கடந்த நிலையில் பணம் கொடுத்தவர்கள் பணி நியமன ஆணையைப் பெற்று கொடு அல்லது தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தரவேண்டும் என தீபாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர் .
இந்த நிலையில் தீபா இன்று நாளை என கூறி வந்தவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. குற்றம் பொருத்தான்னிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவரின் மனைவிக்கு வேலைக்காக பணம் வாங்கி ஏமாற்றி வந்த நிலையில் கீழ்வேளூர் காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகம் காயத்ரி புகார் அளித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் தீபாவை தேடி காயத்ரியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பல ஊர்களுக்கு செலவு செய்து அலைந்துள்ளனர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் பழையனூர் கிராமத்தில் எல்லோரிடமும் இவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த நிலையில் அதிகாலை தீபாவின் தாயார் மற்றும் அவரது சகோதரர்கள் கடலூர் மாவட்டத்தில் வாடகை வாகனம் எடுத்து வந்து வீட்டில் உள்ள பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்டபோது தகவலறிந்த காயத்ரி மற்றும் அவரது கிராம மக்கள் அவர்களை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தகவல் தெரிந்த பாதிக்கப்பட்டவர்கள் அங்கு குவிய தொடங்கியவுடன் இவர்களை பாதுகாப்பாக மறைத்து வைத்துள்ளனர் .
இந்த நிலையில் வாகன ஓட்டுநர் அவசர போலீஸ் 100 எண்ணிற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் தீபாவின் தாய் மற்றும் சகோதரர் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொருட்களோடு வாகனத்தை கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்த காயத்ரி மட்டுமல்லாமல் ராமர்மடத்தைச் சேர்ந்த சிந்தன், சிக்கல் பகுதியைச் சேர்ந்த பாத்திமா மற்றும் யாசா சபீகா உள்ளிட்ட 4 பேர் அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு தீபா மோசடி செய்துள்ளதாக புகார் கொடுத்து உள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் அன்றாட கூலி வேலை செய்து வருவதாகவும் வீட்டு பத்திரம் மற்றும் நகைகள் அடகு வைத்தும் வட்டிக்கு பணம் வாங்கி தீபாவிடம் பணம் கொடுத்துள்ள நிலையில் கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
இந்த மோசடியில் தீபா மட்டுமல்லாமல் ஒரு குழுவாக செயல்பட்டு உள்ளதாகவும் அவ்வப்போது அதிகாரி எனக்கூறி ஆண் நபர்கள் பேசி வந்ததாகவும் தெரிவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் தீபாவை கைது செய்து அவரிடமிருந்து தாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு தருவதோடு இனி ஒரு நபர் தீபாவிடம் ஏமாறக்கூடாது என்பதற்காக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே தலைமறைவாக இருந்த தீபாவை காவல்துறையினர் அழைத்து வந்து தற்போது கீழ்வேளூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதால் இவ்வழக்கை மாவட்ட குற்ற பிரிவு காவல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
சென்னை
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion