மயிலாடுதுறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புடன் இலவச பயிற்சி வகுப்பு
மயிலாடுதுறை ஜோதி அறக்கட்டளை சார்பில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி வகுப்புகளை இன்று தொடங்கியுள்ளனர்.
![மயிலாடுதுறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புடன் இலவச பயிற்சி வகுப்பு foundation started a free training course with job opportunities for the differently abled TNN மயிலாடுதுறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புடன் இலவச பயிற்சி வகுப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/33aca17595b223e232cf3011ef619df01684495924926186_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில், ஜோதி பவுண்டேஷன் என்ற சமூக அறக்கட்டளை நிறுவனம் கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக மயிலாடுதுறை பகுதிகளில் மாற்று திறனாளிகள் சாலையோர வசிக்கும் முதியவர்கள் என பலருக்கும் தினசரி காலை உணவு வழங்கி வருகின்றனர். மேலும் மலை வெள்ளம் புயல் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண உதவிகளும், கொரோனா காலகட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமங்களை தத்தெடுத்து உதவிகளை செய்தனர். மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களின் அடுத்த கட்ட சமூக சேவையாக பல்வேறு வகையான மாற்று திறனாளிகளை ஒன்றிணைத்து அவர்களின் கல்வி திறமைகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பயிற்சிகளை அளித்து அவர்களை பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு பணிகளுக்கு செல்லும் வகையில் தயார் செய்ய இலவச பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளனர். அதனை அடுத்து இன்று அதற்கான துவக்க நிகழ்வு, மயிலாடுதுறையில் உள்ள ஜோதி அறக்கட்டளை அலுவலகத்தில், அறக்கட்டளை தலைவர் சேகர் தலைமை நடைபெற்றது.
இதில் கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அறக்கட்டளையின் இந்த செயல்பாடு பல்வேறு தரப்பட்ட மக்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் தொடர்ந்து இந்த பயிற்சி வகுப்புகள் மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகாக்களில் தொடங்கப்பட உள்ளதாக அறக்கட்டளையின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)