மேலும் அறிய

தஞ்சையில் டீ கடையில் பற்றி எரிந்த சிலிண்டர் - அலறியடித்து ஓடிய மக்கள்

தஞ்சையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கீழவாசல் பகுதியில் திடீரென்று ஒரு டீக்கடையில் இருந்த கேஸ் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்ததால் ஏற்பட்ட தீவிபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கீழவாசல் பகுதியில் திடீரென்று ஒரு டீக்கடையில் இருந்த கேஸ் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்ததால் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சையில் மிகுந்த போக்குவரத்து நிறைந்த பகுதி என்றால் அது கீழவாசல்தான். காரணம் மளிகை, மீன் விற்பனை, பாத்திரங்கள், நாட்டு மருந்து கடை, காய்கறி கடைகள், டீக்கடைகள், உணவகங்கள் என்று இப்பகுதியில் ஏராளமான கடைகள் நிறைந்துள்ளது. இதனால் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். லோடு இறக்கும் வாகனங்கள், கிராமப்பகுதிகளில் இருந்து பொருட்கள் வாங்கும் மக்கள் என்று பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

இந்நிலையில் கீழவாசலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள காமராஜ் மார்க்கெட் அருகே ஒரு டீக்கடையில் கேஸ் சிலிண்டரில் இருந்து எரிபொருள் கசிந்தது. இதனால் சிலிண்டரில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதை பார்த்துவிட்ட டீ மாஸ்டர் சட்டென்று சிலிண்டரை பயத்தில் வெளியே தூக்கி வைத்து விட்டார் என்று கூறப்படுகிறது.

சிலிண்டரில் பற்றி எரிந்த தீ கடையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் பற்றியுள்ளது. இதனால் வாகனங்கள் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதை பார்த்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பீதியில் மக்கள் கத்திய அலறல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த அக்கம்பக்கத்தினர் பற்றி எரிந்த வாகனங்களின் அருகில் நின்றிருந்த மேலும் சில இரு சக்கர வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து வாகனங்களின் உரிமையாளர்கள் அவசர அவசரமாக தங்களின் டூவிலர்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

தஞ்சையில்  டீ கடையில் பற்றி எரிந்த சிலிண்டர் - அலறியடித்து ஓடிய மக்கள்

இந்த தீ விபத்தில் டீ மாஸ்டரின் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் அதன் அருகே இன்னொரு வாகனமும் முழுவதும் எரிந்தது. தீ விபத்து குறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் சிலிண்டரில் பற்றி எரிந்த தீயும் அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை காவல்துறையின் தடயவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் கீழவாசல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேஸ் சிலிண்டரில் இருந்து எரிபொருள் கசிவை உடனே கவனித்ததால் பெரும் தீவிபத்து மற்றும் உயிர் சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தீ விபத்து நேர்ந்த நேரத்தில் அதிக மக்கள் நடமாட்டம் இருந்தது. சட்டென்று கேஸ் சிலிண்டரை தூக்கி வெளியில் வைத்ததால் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாகனங்கள் எரிந்து சாம்பலாகி விட்டது. கேஸ் சிலிண்டர் உபயோகிப்பவர்கள் இதுபோன்ற நேரங்களில் தீயை அணைக்க என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்த கன்ட்ரோலும் எங்க கிட்ட.. பாகிஸ்தானுக்கு மட்டும் இல்ல.. உலக நாடுகளுக்கே மெசேஜ் சொன்ன இந்தியா
"ஒரு ஏவுகணையை கூட மிஸ் செய்யல" சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0.. ஒரு நாள் இரவில் நடந்தது அல்ல! 
Khawaja Asif: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தானை மிரளவைத்த இஸ்ரேல் ஆயுதங்கள்.. பஞ்சாப்-க்கு இதுதான் எல்லைச்சாமி
பாகிஸ்தானுக்கு சீனா.. இந்தியாவுக்கு இஸ்ரேல்.. இது, என்ன புது கூட்டணியா இருக்கு?
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ராயல் சல்யூட் JAWAN” வீரமரணம் அடைந்த இந்திய வீரர்! யார் இந்த முரளி நாயக்?S 400 Missile: ”அவன் குறுக்க போயிடாதீங்க சார்” ரஷ்யா அனுப்பிவைத்த எமன்.. S-400 சாவுமணி அம்சங்கள்!Student Death: தோல்வி பயத்தில் தற்கொலை! +2 மாணவி விபரீத முடிவு! RESULT பார்த்து அதிர்ந்த பெற்றோர்கர்ப்பமாக இருக்கும் சோபிதா?நாக சைதன்யா வீட்டில் விசேஷம் 5 மாதத்தில் GOOD NEWS | Naga chaitanya sobhita

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்த கன்ட்ரோலும் எங்க கிட்ட.. பாகிஸ்தானுக்கு மட்டும் இல்ல.. உலக நாடுகளுக்கே மெசேஜ் சொன்ன இந்தியா
"ஒரு ஏவுகணையை கூட மிஸ் செய்யல" சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0.. ஒரு நாள் இரவில் நடந்தது அல்ல! 
Khawaja Asif: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் தற்குறித்தனமான விளக்கம்.. இவர நம்பியா போர்ல இறங்குனாங்க.!!
பாகிஸ்தானை மிரளவைத்த இஸ்ரேல் ஆயுதங்கள்.. பஞ்சாப்-க்கு இதுதான் எல்லைச்சாமி
பாகிஸ்தானுக்கு சீனா.. இந்தியாவுக்கு இஸ்ரேல்.. இது, என்ன புது கூட்டணியா இருக்கு?
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
போட்டி நடத்தினால் தாக்குதல்! சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
Army Jawan Martyred: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீர மரணம்! – யார் இவர்?
அத மட்டும் பண்ணாதீங்க..இந்தியா பாகிஸ்தான் போர் பற்றி இயக்குநர் ராஜமெளலி கோரிக்கை
அத மட்டும் பண்ணாதீங்க..இந்தியா பாகிஸ்தான் போர் பற்றி இயக்குநர் ராஜமெளலி கோரிக்கை
Pakistan MP Crying: இப்போ வருந்தி என்ன பண்றது.? தவறு செய்துவிட்டோம் என கதறி அழுத பாக். எம்.பி-யின் வீடியோ வைரல்...
இப்போ வருந்தி என்ன பண்றது.? தவறு செய்துவிட்டோம் என கதறி அழுத பாக். எம்.பி-யின் வீடியோ வைரல்...
TNEA 2025: பொறியியல் படிப்புகளுக்கு நடந்துவரும் முன்பதிவு; ஜூன் 6 வரை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
TNEA 2025: பொறியியல் படிப்புகளுக்கு நடந்துவரும் முன்பதிவு; ஜூன் 6 வரை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget