நாகையில் சமத்துவ வளைகாப்பு நிகழ்ச்சி - கர்ப்பிணி பெண்கள் மகிழ்ச்சி
நாகையில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் சமத்துவ வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றது.
நாகையில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் சமத்துவ வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் இந்து ,முஸ்லிம், கிறிஸ்துவம் உள்ளிட்ட மூன்று மதத்தை சேர்ந்த 500 கா்ப்பிணிகளுக்கு 5 வகையான ஊட்டச் சத்து உணவு, சீா்வரிசைப் பொருட்களை ஆட்சியர் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின்,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கா்ப்பிணிப் பெண்களுக்கு ஆண்டுதோறும் சமுதாய வளைப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் நாகப்பட்டினம், திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 500 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மத நல்லினத்திற்கு எடுத்துக்காட்டாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று சமுதாயத்தைச் சேர்ந்த 500 கர்ப்பிணி பெண்களை ஒன்றிணைத்து இந்து முறைப்படி வளைகாப்பு நடத்தப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் மாலை மற்றும் வளையல்கள் அணிவிக்கப்பட்டு, மலர்கள் தூவி ஆசிர்வாதம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை தட்டினை வழங்கினார். அதைத்தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகையான ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது. மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் குறித்தும் கண்காட்சி வடிவில் இயற்கை காய்கறிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் மும்மதத்தைச் சேர்ந்தவருக்கும் இந்து முறைப்படி சமுதாய வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்றது நிகழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக மாற்று மதத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் குடும்ப உறுப்பினர் போல ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் வளைகாப்பு நிகழ்வினை நடத்தி இருப்பது மிகுந்த தேவை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் அகவிலைப்படி நிலுவை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கங்களின் போராட்ட குழு சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
2022ம் ஆண்டு ஜனவரி முதல் முன்தேதியிட்டு அறிவித்து அகவிலைப்படி நிலுவை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி இல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி வழங்கவேண்டும். அகவிலைப்படி இல்லாத ஓய்வூதியம் பெரும் பணியாளர்களுக்கு ஒட்டுமொத்த தொகையாக அகவிலைப்படி வழங்கவேண்டும் .
அனைத்து துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொகுப்பூதியம் , மதிப்பூதியம் , தினக்கூலி , துப்புரவு பணியாளர்கள் , மேல் நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் , தூய்மை காவலர்கள் , டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து ஊதிய விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும். தூய்மை காவலர்களுக்கு குழு மூலம் ஊதியம் வழங்காமல் நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை வேண்டும் . உணவு பொருட்கள் பொட்டலங்களாக வழங்க வேண்டும் .
டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் , காலமுறை ஊதியம் வழங்கே வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நியாயவிலைக் கடை பணியாளர் சங்க ஓய்வு பெற்ற மாநில அமைப்பாளர் நெடுஞ்செழியன், மாநில பொருளாளர் பிரகாஷ், ஊராட்சி களப்பணியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்