மேலும் அறிய

மயிலாடுதுறை: ஒரு வகுப்பறை 8 வகுப்புகள்.. வகுப்பறைகள் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கல்வி.. நடவடிக்கை என்ன?

மயிலாடுதுறை அருகே போதிய வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியிலும், ஒரே வகுப்பில் பல மாணவர்கள் அமரும் அவலநிலை நிலவிவருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்த புங்கனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு மல்லுக்கடி, காடக்குடி, வரவுகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய கூலி விவசாய தொழிலாளர்களின் குழந்தைகள் சுமார் 200 பேர் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.

மயிலாடுதுறை: ஒரு வகுப்பறை 8 வகுப்புகள்.. வகுப்பறைகள் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கல்வி.. நடவடிக்கை என்ன?

அப்பள்ளியில் உள்ள 2 வகுப்பறை கட்டடங்களில் 8 வகுப்பு அறைகளில் மாணவர்கள் கல்வி பயின்று வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த இரண்டு வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டு  6 வகுப்பறைகளில் பாடம் நடத்தப்பட்டது. இந்நிலையில் நெல்லையில் பள்ளி ஒன்றின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு அற்ற கட்டிடங்களை இடிக்க அரசு உத்தரவிட்டது.

அதனையடுத்து இப்பள்ளில் நான்கு வகுப்புகள் கொண்ட இரண்டு கட்டிடங்கள் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயில தகுதி இல்லை என கண்டறியப்பட்டு ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டு, மற்றோரு கட்டிடத்தில் மாணவர்களை அனுமதிக்காமால் இருந்து வருகிறது.

மயிலாடுதுறை: ஒரு வகுப்பறை 8 வகுப்புகள்.. வகுப்பறைகள் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கல்வி.. நடவடிக்கை என்ன?

இதனால் சுமார் 200 மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் தலைமையாசிரியர் அறை மற்றும் ஒரு வகுப்பறை மட்டுமே உள்ளதால் மாணவர்கள் வகுப்பு வாரியாக அமர்ந்து கல்வி பயில முடியாத நிலையில் 1 ஒன்று முதல் 8 வரை உள்ள மாணவர்கள் அனைவரையும் ஒன்றாக அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு அவர்கள் வகுப்பு சார்ந்து தனி தனியாக பாடம் நடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்து.

மயிலாடுதுறை: ஒரு வகுப்பறை 8 வகுப்புகள்.. வகுப்பறைகள் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் கல்வி.. நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் அதிக நிதியாக 36 ஆயிரம் கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிக்க வகுப்பறை இல்லாத அவலம் நிலவிவருகிறது. இது சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கொரோனா பாதிப்புக்கு பின் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து அரசுப்பள்ளிகளை மக்கள் நாடும் ஊழல் தற்போது ஏற்பட்டு இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில் இதுபோன்று போதிய வகுப்பறைகள் இன்றி கல்வி பாதிக்கும் சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டால் மீண்டும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளிலேயே சேர்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதனை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு போதிய வகுப்பறைகள் இல்லாத பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் விரைவாக கட்டிடங்களை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget