மேலும் அறிய

பரப்பளவில் தஞ்சை பெரிய கோயிலை விட 3 மடங்கு பெரியது! எந்த கோயில் தெரியுங்களா?

பரப்பளவில் தஞ்சைப் பெரியகோயிலை விட மூன்று மடங்கு பெரியது திருவையாறு ஐயாறப்பர் கோயில். இங்கு ஒரே இடத்தில் மூன்று சிவன் கோயில்கள் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பாகும்.

தஞ்சாவூர்: பரப்பளவில் தஞ்சைப் பெரியகோயிலை விட மூன்று மடங்கு பெரியது திருவையாறு ஐயாறப்பர் கோயில். இங்கு ஒரே இடத்தில் மூன்று சிவன் கோயில்கள் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பாகும்.

தனிச்சிறப்பு வாய்ந்த ஐயாறப்பர் கோயில்

தஞ்சை மாவட்டம் திருவையாறு என்றாலே தியாகராஜர் ஆராதனை விழாவும், சுடச்சுட விற்பனையாகும் அசோகா அல்வாவும் சட்டென்று அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். இதையும் தாண்டி ஆன்மீக பக்தர்களின் நெஞ்சம் நிறைக்கும் மற்றொரு விஷயம் இருக்கிறது. அதுதான் சிறப்பு மிக்க பழமை வாய்ந்த திருவையாறு ஐயாறப்பர் கோயில்தான்.

இக்கோயிலில் ஐயாறப்பர் எழுந்தருளியுள்ள காவிரிக் கோட்டம் உள்ளது. தெற்கே தென் கயிலாயம், வட திசையில் வட கயிலாயம் என ஒரே இடத்தில் மூன்று சிவன் கோயில்கள் அமைந்துள்ளது மிகச்சிறப்பாகும். இதைச் சுற்றி பெரிய திருமதில்கள் உள்ளன. 15 ஏக்கர் பரப்பளவுடைய இக்கோயில் பரப்பளவில் தஞ்சைப் பெரியகோயிலை விட மூன்று மடங்கு பெரியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பரப்பளவில் தஞ்சை பெரிய கோயிலை விட 3 மடங்கு பெரியது! எந்த கோயில் தெரியுங்களா?

ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் கோயில் பல்லவ மன்னன் நந்தி வர்மன் காலத்தில் கட்டப்பட்டது. மூன்றாம் திருச்சுற்று கிழக்குக் கோபுரம் விக்கிரம சோழனால் கட்டப்பட்டது. மேற்குக் கோபுரம் முதல் சுற்று, நடை திருமாளிகை பத்தி, சூரிய புஷ்கரணி, தெற்குக் கோபுரம் ஆகியவை ஆணையபிள்ளையும், அவருடைய தம்பி வைத்தியநாதரும் எழுப்பியவை.

வடகயிலாயத்தை கட்டிய ஒலோக மாதேவி

இங்குள்ள வட கயிலாயம் என்ற ஒலோக மாதேவீச்சரம் முதலாம் ராசராச சோழனின் மனைவி ஒலோக மாதேவியால் கட்டப்பட்டது. தென் கயிலாயம் கோயிலை கங்கை கொண்டான் என்றழைக்கப்படும் முதலாம் ராசேந்திர சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியால் கட்டப்பட்டது. முதலாம் ராசராச சோழன் காலத்தில் இந்த ஊர் பொய்கை நாட்டுத் திருவையாறு என அழைக்கப்பட்டது.

இங்கு ஞானசம்பந்தர், திருநாவுச்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என அனைத்து நாயன்மார்களும் பாடியுள்ளனர். இக்கோயிலுக்கு நிறைய பதிகங்கள் பாடப்பட்டுள்ளள.

கோயிலில் அமைந்துள்ள 5 திருச்சுற்றுகள்

இக்கோயிலில் மொத்தம் 5 திருச்சுற்றுகள் உள்ளன. முதல் திருச்சுற்றில் மூலவரும், அனைத்துப் புடைசூழ் தெய்வத் திருமேனிகளும் உள்ளன. இரண்டாம் திருச்சுற்றில் சோமாஸ்கந்தருக்கு தனிக் கோயிலும், அதன் அருகில் செப்பேசுர மண்டபமும், பஞ்ச பூதலிங்கங்களும், ஏழு கன்னியர்களும், ஆதி விநாயகரும், நவக்கிரக கோயில்களும் உள்ளன. இந்தச் சுற்றிலேயே விநாயகர், வில்லேந்திய வேலவர், நடராசர், ஏழூர் திருநகர் லிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் இறைவனின் திருப்பெயரான ஐயாறா எனச் சொல்லி அழைத்தால் ஏழு முறை எதிரொலியாக ஒலிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. நான்காம் திருச்சுற்றின் தெற்குப் பகுதியில் பஞ்சவன் மாதேவியால் கட்டப்பட்ட தென் கயிலாயம், ஒலோகமாதேவியால் கட்டப்பட்ட வட கயிலாயம் போன்றவை உள்ளன. இந்தச் சுற்றின் கீழ், மேல் திசைகளில் சிற்பக் கலைகளால் அழகாக அமைக்கப்பட்ட வானுயர் ராஜகோபுரங்கள் தென் கோபுர வாயிலில் ஆட்கொண்டார் சன்னதி உள்ளது.
 
ஐயாறப்பர் மூலவர் கோயிலுக்கு ஈசானத்தில் அறம் வளர்த்த நாயகியின் கோயில் உள்ளது. கிழக்குக் கோபுரத்துக்கும் அறம் வளர்த்த நாயகி கோயிலுக்கும் நடுப்பகுதியில் நூற்றுக்கால் மண்டபத்தில் தண்டபாணி கோயிலும், ஆட்கொண்டார் சன்னதியை அடுத்து உள் பகுதியில் திருக்குளத்தை ஒட்டி காசி விசாலாட்சி கோயிலும் அமைந்துள்ளன.

ஐந்து ஆறுகள் ஓடுவதால் பெயர் பெற்ற திருவையாறு

திருவையாறு அருகில் காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய 5 ஆறுகள் ஓடுகின்றன. இத்தலத்து இறைவனுக்கு இந்த 5 ஆறுகளின் நீரினால் அபிஷேகம் செய்யப்படுவதால் திருவையாறு என அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலுக்குச் செல்லும் வழி: தருமபுர ஆதீனத்திற்கு உள்பட்ட தேவஸ்தானங்களில் இக்கோயிலும் ஒன்று. தஞ்சாவூரிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 33 கி.மீ. தொலைவிலும் உள்ள திருவையாறில் இக்கோயில் உள்ளது. புகழ் பெற்ற இக்கோயிலை பார்ப்பதற்காக ஏராளமான வெளி மாவட்ட, மாநில சுற்றுலாப்பயணிகள், வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருவையாறின் பெருமைகளில் இக்கோயிலும் ஒன்றாகும். என்னங்க குழந்தைகளுடன் புறப்பட்டாச்சா திருவையாறுக்கு...!!!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Embed widget