கொள்ளிடம் ஆற்றில் கரையை பாதுகாக்க தயார் நிலையில் 25 ஆயிரம் மணல் மூட்டைகள்
கொள்ளிடம் ஆற்றின் கரையை பாதுகாக்க 25 ஆயிரம் மணல் மூட்டைகளும், மீட்பு பணிக்காக தீயணைப்பு துறை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையும் முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி, கர்நாடகவில் இருந்து வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் நான்கு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் தற்போது ஐந்தாவது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு சென்று கொண்டுள்ளது. இது இன்று மாலை படிப்படியாக அதிகரித்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வரும் என்பதால் கொள்ளிடம் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தண்ணீரின் அளவு அதிகரித்து வரும் சூழலில் ஆற்றில் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
கொள்ளிடம் ஆற்றில் தற்போது 90 ஆயிரம் கன அடி வெள்ளநீர் செல்லும் நிலையில் இன்று மாலை 1.80 லட்சம் கன அடி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கபடுவதால் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிகபடியான வெள்ள நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்று படுகையில் உள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு கிராமங்கள் துண்டிக்கபடும் அபாயம் உள்ளதால் 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. ஆற்றின் கரையில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையை பலபடுத்தும் பணிகளுக்காக 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் நீண்ட சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது. மீட்பு பணிக்காக தீயணைப்பு துறை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், படகுகளுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது. குத்தாலம், கோமல், திருவாலங்காடு, சேத்திராபாலபுரம், மணல்மேடு, கிழாய், வில்லியநல்லூர் உள்ளிட்ட