மேலும் அறிய

தலைக்கு மேலே அபாயம்... பார்க்கவே மாட்டீங்களா அதிகாரிகளே

பலமுறை இதை குறித்து மாநகராட்சிக்கும் போக்குவரத்து துறைக்கும் தகவல் தெரிவித்தோம். ஆனால் இதுவரை எந்தச் செயல்பாடும் எடுக்கப்படவில்லை.

தஞ்சாவூர்: காத்திருக்குது அபாயம்... அதிகாரிகள் கண்ணில் படவே இல்லையா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். என்ன விஷயம் என்று தெரியுங்களா?

கும்பகோணம் நகர பஸ் நிலையத்தில் அபாய நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் தகரப் பலகைகள் குறித்து பொதுமக்களும் பயணிகளும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதெல்லாம் அதிகாரிகள் கண்ணில் படவே படாதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கும்பகோணம் புதிய பஸ் நிலையம் எதிரே அமைந்துள்ளது நகர பஸ் நிலையம். தினமும் இங்கு 50க்கும் மேற்பட்ட நகரப் பஸ்களும், 25க்கும் மேற்பட்ட மினி பஸ்களும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. கும்பகோணத்தைச் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மக்கள் தினசரி இந்த நிலையம் வழியாகவே பயணம் செய்கின்றனர். இதனால் இங்கு ஒரு நாளில் சராசரியாக ஆயிரக்கணக்கானோர் காலை முதல் நள்ளிரவு வரை வருகை தருகின்றனர்.

அத்தகைய இடத்தில், பஸ் காத்திருப்பு மண்டபம் முன்புறம் நிறுவப்பட்டிருந்த தகரப் பலகைகள் தற்போது பழுதடைந்து, சில இடங்களில் கழன்று தொங்கியவாறு உள்ளன. காற்று பலமாக வீசும் நேரங்களில் பலகைகள் ஆடிக்கொண்டே இருப்பது பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. “இந்த பலகைகள் எந்த நேரத்திலும் கீழே விழும் ஆபத்து உள்ளது. குழந்தைகள், முதியவர்கள் அடிக்கடி இங்கு வருகிறார்கள். விபத்து ஏற்பட்டால் பெரிய உயிர்சேதம் நேரலாம்” என பயணிகள் கவலை தெரிவித்தனர்.

மேலும், சிலர் கூறுகையில், “பலமுறை இதை குறித்து மாநகராட்சிக்கும் போக்குவரத்து துறைக்கும் தகவல் தெரிவித்தோம். ஆனால் இதுவரை எந்தச் செயல்பாடும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, உடனடியாக பழுது பார்த்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அபாய நிலையில் உள்ள தகரப் பலகைகளை உடனடியாக அகற்றவும், புதிய பலகைகள் பொருத்தப்படவும் வேண்டும் இன்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
டெல்லி தடியடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்... தஞ்சையில் 39 பேர் கைது
டெல்லி தடியடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்... தஞ்சையில் 39 பேர் கைது
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
உள்ளிருப்பு போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தஞ்சையில் ஏற்பட்ட பரபரப்பு
உள்ளிருப்பு போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தஞ்சையில் ஏற்பட்ட பரபரப்பு

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget