மேலும் அறிய

சித்திரை முதல்நாள்... தஞ்சை மாவட்ட விவசாயிகள் பொன்னேர் பூட்டினர்

சித்திரை மாதத்தில் உழவு ஓட்டி சூரிய பகவானிடம் வேண்டுதலே பொன்னேர் உழுதலின் நோக்கம். சித்திரை மாதத்தில் செய்யும் உழவை `நல்லேர் பூட்டுதல்’, `புழுதிஉழவு’, `கோடை உழவு’ என்றும் சொல்வார்கள்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் சித்திரை மாத பிறப்பை ஒட்டி விவசாயிகள் பொன்னேர் உழுதல் என்கிற நல்லேர் பூட்டி வயலை உழுதனர்.

சித்திரை மாதத்தில் உழவு ஓட்டி சூரிய பகவானிடம் வேண்டுதலே பொன்னேர் உழுதலின் நோக்கம். சித்திரை மாதத்தில் செய்யும் உழவை `நல்லேர் பூட்டுதல்’, `புழுதிஉழவு’, `கோடை உழவு’ என்றும் சொல்வார்கள். தமிழ் ஆண்டின் தொடக்க மாதமான சித்திரையின் முதல் நாளிலோ, வளர்பிறை அன்றோ மாடுகளைத் தயார் செய்து விவசாயிகள் ஏர்பூட்டி ஒன்று சேர்ந்து உழுவதற்குப் பெயர்தான் `பொன்னேர் உழுதல்’ என்று பெயர்.

சித்திரை முதல்நாள்... தஞ்சை மாவட்ட விவசாயிகள் பொன்னேர் பூட்டினர்

பொன்னேர் பூட்டி நிலங்களை உழுது நவதானியத்தை விதைப்பார்கள். இதில் முளைத்து வளரும் தானியங்களை கால்நடைகள் உண்ணும். நிலத்தை மீண்டும் விவசாயத்துக்குத் தயார்படுத்துவதில் விவசாயிகள் ஒன்றுகூடி செய்யும் சித்திரை மாத தொடக்க வழிபாட்டுச் சம்பிரதாயமே இதன் நோக்கம்.

சித்திரை மாசப் புழுதி பத்தரை மாற்று தங்கம், சித்திரையில மழை பெய்ஞ்சா பொன் ஏர் கட்டலாம்னு கிராமத்துல சொலவடையே இருக்கு. மாடுகளைக் குளிப்பாட்டி, பொட்டு வச்சு, மாலை போட்டு, விளக்கேற்றி, நெல்லு வச்சு தேங்காப்பழம் உடைச்சு , மாடுகளுக்கும், ஏர்கலப்பைக்கும் சாம்பிராணி காட்டி சுவாமி கும்பிட்டு ஏரை எடுத்துக் கொண்டு தங்களின் குலதெய்வ கோயிலுக்கு வந்து வரிசையா நிறுத்துவர்.

ஒவ்வொரு விவசாயிகள் வீட்டிலும் இருந்து விதை நெல், கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகுனு என்ன விதை இருக்கோ, அதுல ஒரு கைப்பிடி விதையை ஓலைப்பெட்டியில சேகரிச்சு குலதெய்வ கோயிலில் வைத்து சுவாமி கும்பிட்டு ஏர் கலப்பைக்கும், மாடுகளுக்கும் மஞ்சள் தண்ணீர் தெளிச்சு, சூடம் காட்டினதும் வரிசையாக புறப்பட்டு வயலுக்கு சென்று ஏர்பூட்டி நிற்கும். நிலத்துலயும் பூஜை செஞ்சு  நிலத்தை உழுது சேகரிக்கப்பட்ட விதைகளைத் தூவி விடுவார்கள். நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு செய்வதுதான் இந்த பொன்னேர் பூட்டுதல் திருவிழா.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் வேங்கைராயன் குடிகாடு உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பொன்னேர் பூட்டும் திருவிழாவுக்காக அனைவரும் ஒன்று திரண்டு தங்களின் குலதெய்வ கோயிலுக்கு வந்தனர். பின்னர் அங்கு பூஜைகள் செய்துவிட்டு விதை நெல், ஏர் கலப்பை, மாட்டு வண்டி ஆகியவற்றுடன் ஊர்வலமாக அந்தந்த பகுதியில் உள்ள தங்களின் வயலுக்கு சென்று அங்கும் இயற்கையை  வழிப்பட்டு தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

பின்னர் ஏர் கலப்பை பூட்டி வயலை உழுது விதை நெல்லை விதைத்தனர். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை, சம்பா, தாளடி என்று முப்போக நெல் சாகுபடி நடைபெற வேண்டும். மேலும் கரும்பு, எள், வாழை, பருத்தி, கடலை உட்பட அனைத்து பயிர்களும் நன்கு விளைந்து விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்று வழிபாடு நடத்தினர். பின்னர் தங்கள் வயல்களில் மாடுகளை ஏர்கலப்பையில் பூட்டி வயல்களை உழுது பணியை தொடங்கினர்.

இதேபோல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொன்னேர் பூட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. சில பகுதிகளில் அருகருகே வயல்கள் உள்ள விவசாயிகள் ஒன்று சேர்ந்து கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி ஊர்வலமாக தங்களின் வயலுக்கு வந்து நல்லேர் பூட்டி வயலை உழுதனர்.

தலைப்பு செய்திகள்

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Embed widget