’’பாஜக தலைவர் அண்ணாமலை லோக்கல் போலீஸ் போல் நடந்து கொள்கிறார்’’- பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு
’’மத்திய அரசினுடைய ஆளுநரின் அதிகாரங்கள் வரம்பு மீறி சென்றால் அதற்கு பழனிச்சாமி போல் பயப்படக்கூடிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லை’’
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் .பீட்டர் அல்போன்ஸ் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பலவீனம் ஆகிக் கொண்டு வருகிறது. அதனுடைய இடத்தை பாஜக கபளீகரம் செய்து தன்னை ஒரு எதிர்க்கட்சியாக ஆக்கிக் கொள்ள முயல்கிறது. சட்டசபை தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட போதும், அதிமுகவின் இயலாமையை சாதகமாக பயன்படுத்தி கொண்டு எதிர்க்கட்சி என்ற இடத்தை பிடித்து கொள்வதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளில் எடுத்து வருகின்றனர். அதில் ஒரு விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முறையிலேயே மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்ற வகையிலே நீண்ட காலமாக தூங்கி கொண்டிருந்த நிர்வாகத்தை தட்டி எழுப்பி, தற்போதைய திமுக அரசு முறையாக நடந்து வருகிறது. இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை கூறி பொது மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்க்கின்றனர். விடப்படாத டெண்டர்களில் ஊழல் என்று சொல்கின்றனர் ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாகவும் கூறுகிறார்கள். முறைகேட்டிற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் வழக்குப் போட்டு பாருங்கள் என்று சொல்கிறார்கள்.
ஆகவே தமிழக அரசியலில் குழப்பத்தை உருவாக்கி இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலமான தமிழகத்தின் நிர்வாகத்தை உயர்த்துவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளும் பொழுதும் இடைவிடாது உழைத்து கொண்டிருக்கும் வேளையிலே தமிழக அரசினுடைய கவனத்தையும், உழைப்பையும் திசைதிருப்பும் வகையில் பல்வேறு முயற்சியில் பாஜக அரசு செயல்படுகிறது மத்திய அரசனுடைய ஆளுனர் அவர்கள், அரசாங்கத்தில் உள்ள அனைத்து துறை செயலாளர்களும் தகவல்கள் அனைத்தையும் தரவேண்டுமென, அதை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் வந்து விளக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக தெரிகிறது.
அது சம்பந்தமாக தலைமைச் செயலாளர், சம்பந்தப்பட்ட துறை செயலாளருக்கு ஆளுநர் கேட்கும் தகவலை தர வேண்டும் என அறிக்கை அனுப்பியதாக தெரிகிறது. பன்வாரிலால் புரோகித் ஆளுநராக பதவி ஏற்றுக் கொண்ட போது, மாவட்ட நிர்வாகத்தை மேற்பார்வையிட போகிறேன் என புறப்பட்டபோது திமுக உள்ளிட்ட நாங்கள் எல்லோரும் அதனை கண்டித்தோம். எதிர்க்கட்சிகள் அனைவரும் அதனை கண்டித்தும் குறிப்பாக அன்றைய தினம் திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த பிரச்சினையை வன்மையாக கண்டித்து, ஆட்சி அரசியல் என்று சொன்னால்கூட மாநில அரசாங்கத்தின் அதிகாரங்கள் ஆளுநர் எடுத்துக் கொள்வது என்பது வாக்களித்த மக்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகமாகும் அவமானமாகும்.
ஆளுநர் இதுபோன்ற சுற்றுப்பயணங்கள் செய்யக்கூடாது என அதிகாரிகளை நேரடியாக அழைத்து பேசுவது அரசியல் சாசனம் சட்டத்தின் மரபு அனுமதிக்கவில்லை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டி பல இடங்களில் ஆளுநர் போகின்ற வழிகளிலே திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டினோம். அதன் பிறகுதான் அவர் நிறுத்திக் கொண்டார். அன்றைய தினம் வலுவற்ற நிலையில் மிகவும் பலவீனமாக இருந்த அதிமுக அரசாங்க அமைச்சர்கள் கூட உடனிருந்து, வரவேற்புக் கம்பளம் அளித்ததை பார்த்த தமிழக மக்கள் கை கொட்டி சிரித்தார்கள்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது எந்த அதிகாரியும் பார்க்க கூடாது என உத்தரவிடு இருந்தார் காவல்துறை தலைவர் கூட ஆளுநரை சென்று பார்க்க கூடாது என்றார். அதிமுகவின் தொண்டர்களை அனுப்பி ஆளுநர் செல்லும் கான்வாயை கூட விழுப்புரம் பக்கத்தில் மறித்தார்கள் அப்போதுகூட டிஜிபி அங்கு போகவில்லை. இது ஜெயலலிதா ஆட்சியில் இல்லை எடப்பாடியும் இல்லை அரசியல் சாசன சட்டம் என்ன கேட்கிறதோ, என்ன அதிகாரம் ஆளுநருக்கு கொடுத்து இருக்கிறதோ அதனை மதிப்பதற்கு இந்த முதலமைச்சர் தயாராக இருப்பார் ஒரு நாளும் தயங்க மாட்டார். அதேநேரத்தில் மத்திய அரசினுடைய ஆளுநரின் அதிகாரங்கள் வரம்பு மீறி சென்றால் அதற்கு பழனிச்சாமி போல் பயப்படக்கூடிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லை.
மத்திய அரசு இந்தி பேசாத மாநிலங்கள் மீது மாற்றாந்தாய் மனப்பான்மை செயல்படுகின்றது. ஒரு விஞ்ஞான அறிவியல் தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தும் என்று சொல்கிறார்கள். அரசினுடைய ஆட்சி முறை என்பது அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் தமிழ் உட்பட பிற மாநில மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன நிலையில் மாணவருக்கான பேசிய கூடிய தேர்வை நடத்தாமல், ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டும்தான் நடத்துவேன் என்று மத்திய அரசு சொல்வது என்றால் இந்தி பேசாத மாநிலங்களுக்கு மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக மத்திய அரசு நினைக்கிறது.
மத்திய அரசு மொழி தெரியாது, தேர்வு தாளை திருத்த முடியாது என்று கூறுகிறது சிபிஎஸ்சி முக்கியமான பாடம் இரண்டாக பிரிக்கிறது, முக்கியமான பாடம் இந்தியும் ஆங்கிலமும் தான். முக்கியமற்ற பாடம் என்பது இந்தி அல்லாத மாநில மொழிகள். அந்த மாணவர்கள் அந்த மொழியை படித்தாலும் சரி படிக்காவிட்டாலும், தேர்வை அந்தந்த பள்ளிகளே வைத்துக்கொள்ளலாம். நாங்கள் நடத்த வேண்டிய தேர்வு ஆங்கிலமும் இந்தியும் தான் மத்திய அரசு சொல்வதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக ஆளுநருக்கு ஒரு வேண்டுகோள் ஆளுநர் பதவி என்பது தீயணைப்பு வாகனம் போல் தெரிந்தால் வந்து அணைக்க வேண்டும் நெருப்பு இருந்தால் தான் வரவேண்டும். அமைதியான, ஒழுங்காக தமிழகம் முன்னேற்ற பாதையில் நடந்து கொண்டிருக்கின்ற போது, தலையீடு என்பது அவசியமே இல்லை. இதனை அரசியல் சாசன சட்டம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதிகாரிகளை நேரில் அழைத்து பேசுவது என்பது இரண்டு அரசாங்கங்கள் செயல்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்கும்.
அது தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் மிகப்பெரிய ஒப்புதலை அளித்துள்ளார்கள். ஆட்சி அதிகாரத்துக்கு அங்கீகாரம் தந்துள்ளார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆளுநர் அவர்கள் அரசாங்கத்தின் கவனத்தை திசை திருப்புவது மூலமாகவோ மக்களின் முனைப்பை சீர்குலைப்பது போல் அவரின் நடவடிக்கை இருந்துவிடக் கூடாது என நாங்கள் அஞ்சுகிறோம். இது தவறான சமிஞ்சையை ஏற்படுத்தி விடக்கூடாது. பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் கட்சி தலைவர் போல் நடந்து கொள்ளவில்லை இன்னும் லோக்கல் போலீஸ்காரர் போல்தான் நடந்து கொள்கிறார்.
டிராபிக் போலீஸ் உள்ள கான்ஸ்டபிள் எப்படி நடந்து கொள்வாரோ அதனை பின்பற்றி வருகிறார். ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவி ஏற்கும் பொழுது மத்தியில் நடக்கக்கூடிய ஆட்சியில் பிரதிநியாக இருக்கக்கூடியவர் இன்னும் கண்ணியமாக பேச வேண்டும். இதை போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது அவருக்கும் நல்லது ஜனநாயகத்திற்கு நல்லது. அதிமுக உட்கட்சி பேசுவது குறித்து அவருடைய பிரச்சனை. அதனால் ஏற்படும் பிரச்சினை குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். அதிமுக தொடர்ந்து பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறது. அதனால் அதனுடைய பலத்தை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அந்த இடத்தை அபகரிக்க காத்திருக்கிறது. தமிழ்நாட்டினுடைய எதிர்காலத்தை நல்லதல்ல என்றார்.