மேலும் அறிய

அலைச்சலுக்கு டாட்டா… இந்த சான்றிதழ்கள் பெற செல்போனிலேயே விண்ணப்பிக்கலாம் - எப்படி விண்ணப்பிப்பது?

நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகத்திற்கு அலைய வேண்டாம். அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர்: ஒவ்வொன்றுக்கும் எத்தனை முறை அலையறது... இந்த டிஜிட்டல் காலத்திலும் இப்படியா என்று நொந்து போய் இருப்பீங்க. இனி உங்கள் கவலைகள் பஞ்சா பறந்தாச்சு. அட ஆமாங்க... ஜாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது.... தெரிஞ்சுக்கோங்க. 

நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகத்திற்கு அலைய வேண்டாம். அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்

வருமானச் சான்றிதழ்
சாதிச்சான்றிதழ்
இருப்பிடச் சான்றிதழ்
ஓபிசி சான்றிதழ்
வாரிசு சான்றிதழ்
முதல் பட்டதாரி சான்றிதழ்
வேலையில்லா பட்டதாரி சான்றிதழ்
விதவை சான்றிதழ்
கணவணால் கைவிடபட்ட பெண் சான்றிதழ் போன்றவைகள் விண்ணபிக்கலாம்... விண்ணப்பிக்க கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx#

எப்படி விண்ணபிப்பது என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும் முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx# என்ற இணையதளத்திற்கு சென்று இ-சேவை ஐடி-யை Register செய்ய வேண்டும். அடுத்து அதில் உள்ள  Sing up என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

அதில்  தங்களுடைய முழு பெயர், மாவட்டம், தாலுக்கா, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண், Login Id, Password, Confirm Password மற்றும் Captcha code ஆகியவற்றை டைப் செய்து கொள்ளுங்கள்.பின்பு sing up என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய மொபைல்எண்ணுக்கு ஒரு otp எண் அனுப்பப்படும். அந்த otp எண்ணினை டைப் செய்து enter என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு Registration ஆகிவிடும்.

அடுத்து Login செய்வதற்கு மறுபடியும் home page-க்கு செல்லுங்கள் அவற்றுள் user name, password டைப் செயுங்கள். அதன்பிறகு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள captcha code-ஐ டைப் செய்யுங்கள்.பின்பு Login என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய ID லாகின் ஆகிவிடும். அல்லது உங்கள் மொபைல் எண்பதிவு செய்து அதில் வரும் ஓடிபி மூலமும் லாக் இன் செய்யலாம்.

லாக் இன் உள் சென்றவுடன் அதில்  Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்பு அதில்  Revenue department என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இவற்றை கிளிக் செய்தவுடன் Revenue department-யில் என்னென்ன சேவைகள் உள்ளது என்று list out காட்டப்படும். 

அவற்றில் நீங்கள் என்ன விண்ணப்பிக்க போகின்றீர்களோ அதனை செலக்ட் செய்து processd என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அடுத்து  can நம்பர் பதிவு செய்ய வேண்டும் அதில் உங்கள் விவரம், தந்தை பெயர், தாயார் பெயர், குடும்ப உறூப்பினர் விவரம் என அனைத்தையும் பதிவு செய்யுங்கள்  அவ்வளவுதான். அடுத்து நீங்கள் செலக்ட்  செய்த கோரிக்கைக்கு   தேவையான documents-ஐ upload செய்ய வேண்டும். 

அதாவது உங்களுடைய புகைப்படம், Any address proof, Birth certificate, self-declaration போன்றவற்றை upload செய்ய வேண்டும். மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் upload செய்த பிறகு make payment என்ற ஆப்சன் காட்டப்படும். அவற்றை கிளிக் செய்து கிரிடிட் கார்ட், டெபிட் கார்டினை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணம் 60/- ரூபாயை செலுத்தவும்.

இவ்வாறு  இணையதளத்தில் அப்ளை செய்தால், அப்ளை செய்த சில நாட்களுக்குள் நீங்கள் விண்ணப்பித்த  சான்றிதழை பெற்று கொள்ளலாம். என்னங்க சந்தோஷம் தானே. அலைச்சல் இல்ல... அசால்ட்டா இருந்த இடத்திலே இருந்தே அப்ளை செய்திடலாம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
"உனக்கு என்ன பிரச்சினை, போடா!" - சீமானின் ஆவேசப் பேச்சு: கொலை மிரட்டல் வழக்குப் பதிவு!
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
TN Weather Update: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை அறிக்கை
"உனக்கு என்ன பிரச்சினை, போடா!" - சீமானின் ஆவேசப் பேச்சு: கொலை மிரட்டல் வழக்குப் பதிவு!
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
பாகூர் கடம்பேரி ஏரி: சிங்காரி, பங்காரி தியாகம்! வறட்சியில் உயிர்கொடுத்த கதை, ஏரமடி ஐயனாரின் சோகம்!
பாகூர் கடம்பேரி ஏரி: சிங்காரி, பங்காரி தியாகம்! வறட்சியில் உயிர்கொடுத்த கதை, ஏரமடி ஐயனாரின் சோகம்!
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Smriti Mandhana: ஸ்மிரிதி மந்தனா அப்பாவுக்கு என்னதான் பிரச்சினை? மருத்துவர் சொல்வது என்ன?
Smriti Mandhana: ஸ்மிரிதி மந்தனா அப்பாவுக்கு என்னதான் பிரச்சினை? மருத்துவர் சொல்வது என்ன?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Embed widget