மேலும் அறிய

ABP Nadu Exclusive: இந்திய சுதந்திரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்கு என்ன..? - ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக சுவாமிகள் சிறப்பு பேட்டி

இந்திய நாட்டின் சுதந்திரத்தை அடையாளப்படுத்தியது திருவாவடுதுறை ஆதீனம் அனுப்பிய செங்கோல் மீண்டும் வரலாற்றில் இடம் பெற உள்ளது.

இந்திய நாட்டின் சுதந்திரத்தை அடையாளப்படுத்தியது திருவாவடுதுறை ஆதீனம் அனுப்பிய செங்கோல், நாடு சுதந்திரம் பெறும் போது ஒலித்தது தமிழ், இந்திய சுதந்திரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்கு குறித்து ஆதீன 24 வது குருமகா சந்நிதானம் கூறுகையில், “மௌண்ட்பேட்டனிடமிருந்து செங்கோலைப் பெற்றது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம். அதுவும் திருஞானசம்பந்த பெருமானின் கோளறு பதிகத்தை ஆதீன ஓதுவார் பாடி முடித்த பின்னரே பெறப்பட்டது. ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’ இந்நாடு விடுதலை பெற்றது சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் என்னும்போது உடல் சிலிர்க்கிறது, உள்ளம் பூரிக்கிறது. எத்தனையோ மொழிகள் இந்நாட்டில் நிலவ நம் செந்தமிழ் ஒலிக்க நாடு விடுதலை பெற்றது! 
சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மௌண்ட்பேட்டன் தெரிவித்தார். 

ABP Nadu Exclusive: இந்திய சுதந்திரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்கு  என்ன..? - ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக சுவாமிகள் சிறப்பு பேட்டி

நேரு சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரப்பூர்வ விழாவிற்கு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கம் இல்லாதவர். எனவே, ராஜாஜியிடம் கூறினார். மூதறிஞர் உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசிநல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் அன்றைய ஆதீனம் 20 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் அப்போது காய்ச்சலால் அவதியுற்றுக் கொண்டிருந்தார். எனவே, ஆதீனக் கட்டளைத்தம்பிரான் சடைச்சாமி என்றழைக்கப்பட்ட ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகளையும், ஓதுவார் ஒருவரையும், ஆதீன நாதஸ்வர வித்வான் 'நாதஸ்வர சக்கரவர்த்தி" திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையையும் டெல்லிக்குத் தனிவிமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடாயிற்று.

ABP Nadu Exclusive: இந்திய சுதந்திரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்கு  என்ன..? - ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக சுவாமிகள் சிறப்பு பேட்டி

அன்றைக்கு பிரபலமாயிருந்த சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் நகைக்கடையில் சைவச்சின்னம் பொறித்த தங்க செங்கோல் ஒன்று செய்யும்படி ஆதீனத்தில் இருந்து சொல்லப்பட்டது. புறப்படும்போது ஓதுவார் பணிவுடன் ஆதீனத்தைப் பார்த்து அரசு விழாவில் தான் பாடவேண்டிய திருமுறைப்பாடல் எது எனக் குறிப்பிட்டுக் கட்டளை இடவேண்டும் என்று கேட்டார், ஆதீனமும் கோளறு பதிகத்தை பாட சொன்னார்கள். ஆகஸ்ட் 15-ஆம் நாள் நள்ளிரவில், மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் பெற்றார். செங்கோலுக்கு புனிதநீர் தெளித்து, ஓதுவாமூர்த்திகள், 'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்' என்று தொடங்குகிற தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடிக்கும்போது செங்கோலை நேருவிடம் வழங்கினார்கள்.

ABP Nadu Exclusive: இந்திய சுதந்திரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்கு  என்ன..? - ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக சுவாமிகள் சிறப்பு பேட்டி

அரசுச்சின்னமாக இருக்க வேண்டிய சுதந்திரச் செங்கோல் தற்போது பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் உள்ள நேருவின் இல்லமான ஆனந்தபவனில், கண்ணாடி பேழைக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருமுறையும் பாரதத்தின் ஆட்சி மாற்றத்தின்போது இந்த செங்கோல் முறை கடைப்பிடிக்கப்படவேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள இளம் தலைமுறையினர்கள், இந்த வரலாற்றை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த நிகழ்வு பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்யவேண்டும். கோளறு பதிகம் முதல் மற்றும் நிறைவு பாடல்கள்.

வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

இந்திய சுதந்திர வரலாற்றை தற்போது மீண்டும்  புதிய பாராளுமன்றம் கட்டடம் திறப்பு விழாவின் மூலம் நினைவு கூறுவதில் நாமும் பெருமிதம் கொள்கிறேன். எனவும், 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததை அடையாளம் படுத்தும் விதமாக பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோலை தற்போது  புதிய நாடாளுமன்றம் கட்டடம் திறப்பு விழாவில் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்க உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
Embed widget