மேலும் அறிய

ரூ.8 ஆயிரம் கோடியில் உருவாகும் திட்டம்... குவிய போகும் வேலை வாய்ப்புகள்: எங்கு? எப்படி தெரியுங்களா?

சென்னை துறைமுகத்தின், நீண்டநாள் நிலுவையில் இருந்த வெளித்துறைமுக திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டின் வேகமான தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக மிகப்பெரிய கப்பல்களை கையாளும் வகையில் ரூ.8000 கோடியில் வெளித்துறைமுகத் திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக  சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்பதால் பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வேகமான தொழில்துறை வளர்ச்சி காரணமாக உலகளவில் மிகப்பெரிய கப்பல்களை கையாளும் வகையில் ரூ.8000 கோடி மதிப்பீட்டில் வெளித்துறைமுகத் திட்டம் உருவாக்கப்பட உள்ளது என்று சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை துறைமுகத்தின், நீண்டநாள் நிலுவையில் இருந்த வெளித்துறைமுக திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ரூ.8 ஆயிரம் கோடியில் உருவாகும் திட்டம்... குவிய போகும் வேலை வாய்ப்புகள்: எங்கு? எப்படி தெரியுங்களா?

ரூ.8,000 கோடி முதலீட்டில் உருவாகவிருக்கும் இந்தப் பெரிய திட்டம், துறைமுகத்தின் சரக்கு கையாளும் கொள்ளளவை பெரிதும் உயர்த்துவதோடு, போக்குவரத்து நேரத்தையும் செலவையும் குறைக்க உதவும். இந்த வெளித்துறைமுகம் கடல்புறமாக, தற்போதைய துறைமுக வரம்பிற்கு அப்பால் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 20 மீட்டர் ஆழமுள்ள துறைமுகத்துடன், 20,000 (20 அடி நீளமுள்ள கப்பல் கொள்கலன்) அளவிலான சரக்கு அலகு கொள்ளளவுள்ள மிகப்பெரிய கப்பல்களை கையாளும் வசதிகள் இத்திட்டம் மூலம் உருவாக்கப்பட உள்ளது.

இதுகுறித்து துறைமுக ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், சென்னை துறைமுகம் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய சரக்கு மையமாக மாறும். அதிவேக சரக்கு கையாளும் தொழில்நுட்பம் மற்றும் ஆழமான நீர்மட்டத்துடன் உலக தரத்திலான துறைமுக வசதிகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்திற்காக பரிவர்த்தனை ஆலோசகரை துறைமுகம் விரைவில் நியமிக்க உள்ளது.

திட்டத்தின் சாத்திய கூறு ஆய்வறிக்கை முடிந்தவுடன், 2026ம் ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு 45 ஆண்டுகள் கால ஒப்பந்தம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வெளித் துறைமுகம் பல கட்டங்களாக உருவாக்கப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டம் 2031ம் ஆண்டுக்குள் நிறைவு பெற திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க கட்டத்தில் 18 மீட்டர் ஆழமுள்ள கப்பல்களை கையாளும் வசதி ஏற்படுத்தப்படும்.

பின்னர் 21 மீட்டர் ஆழமுள்ள கப்பல்களையும் கையாளும் வகையில் துறைமுகம் மேம்படுத்தப்படும். முன்மொழிவு கோரிக்கை ஆவணத்தின் படி, திட்டத்தில் அலை தடுப்பு அமைப்பு, மண் நிரப்பல் மூலம் துறைமுக நிலப்பரப்பு உருவாக்கம், துறைமுக கட்டிடம், கண்டெய்னர் நிறுத்தம், சாலை மற்றும் ரயில் இணைப்பு, சரக்கு கையாளும் உபகரணங்கள் நிறுவல், துறைமுக ஆழம் அதிகரித்தல் மற்றும் வழிநடத்தும் உபகரணங்கள் போன்ற பல அடிப்படை பணிகள் உள்ளடக்கிய திட்டம் உருவாக்கப்படுகிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வரும் போது ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும். இதன் மூலம் சென்னை பகுதியை சேர்ந்தவர்கள் பயன் பெறுவார்கள்.

இந்த திட்டமானது கடந்த சில ஆண்டுகளாகவே பலமுறை முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. 2007ம் ஆண்டு பாரதி துறைமுகத்தின் வடபுறத்தில் 2 கிலோமீட்டர் நீளமுள்ள துறைமுனையுடன், வருடத்திற்கு 4 மில்லியன் சரக்குகளை கையாளக்கூடிய “மெகா கண்டெய்னர் டெர்மின்’’ அமைக்கும் வகையில் முதன்முதலில் முன்மொழியப்பட்டது. ஐஐடி மெட்ராஸ் தொழில்நுட்ப ஆய்வையும் மேற்கொண்டது. ஆனால், டெண்டர் அறிவிக்கப்பட்டபோது முதலீட்டாளர்களிடமிருந்து பெரிய பதில் கிடைக்கவில்லை என்பதால் கிடப்பில் போடப்பட்டது.

2013ம் ஆண்டிலும் மீண்டும் முயற்சி செய்யப்பட்ட போதும் பெரியளவில் கைகொடுக்காததால் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது, தமிழகத்தின் வேகமான தொழில்துறை வளர்ச்சி, பரந்த அளவிலான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளின் காரணமாக இந்தத் திட்டம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளித்துறைமுகத் திட்டம் உருவாகும் காலத்திற்குள் சென்னை துறைமுகம் - மதுரவயல் உயர்மட்டச் சாலைத் திட்டமும் வேகமாக முடிக்கு வரும்.

இந்தச் சாலை துறைமுகத்திற்குச் செல்லும் கனரக வாகனங்களுக்கு தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நகரத்தின் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சரக்கு வாகனங்கள் துறைமுகத்துக்குள் விரைவாகச் செல்லும் வசதி ஏற்படுகிறது. அதேபோல் வெளித் துறைமுகத் திட்டமும், மதுரவயல் உயர்மட்டச் சாலையும் ஒரே நேரத்தில் உருவாகி வருவதால், சென்னை தென்னிந்தியாவின் முக்கியமான சரக்கு நுழைவாயிலாக மாறும். இதன் மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி வேகம் மேலும் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், சென்னை துறைமுகம் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய சரக்கு மையமாக மாறும். 2026ம் ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு 45 ஆண்டு கால ஒப்பந்தம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் நீண்டகால வேலை வாய்ப்புகள் உருவாகும். 

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Embed widget