மேலும் அறிய

அரசு பேருந்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த காவலர்

கும்பகோணத்தில் அரசு பேருந்தில் மதுபோதையில் வந்த காவலர் சக பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில் அதனைக் கண்டித்த நடத்துனரிடம் தகாத வார்த்தைகளை பேசினார்

தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்திற்கு சென்ற அரசு பேருந்தில் ஒருவர்  பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்ததாக கூறப்படுகிறது.

அரசு பேருந்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த காவலர்

இது குறித்து அந்த பெண், நடத்துனரிடம் முறையிட்டார். இதுகுறித்து அந்த நபரிடம் கேட்டபோது அவர்  மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. பேருந்து கும்பகோணம் வரும் வரை மீண்டும் மீண்டும் அந்த நபர் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்திருக்கிறார். ஆனால் மதுபோதையில் இருந்த அந்த நபரை கண்டிக்க முடியாமல் தவித்துள்ளார். அதனைப் பார்த்த மற்ற  பயணிகள் அந்த நபரை சத்தம் போட்டனர்.

இதையடுத்து பேருந்தை நிறுத்தி அந்த நபரை கீழே இறங்குமாறு நடத்துனர் கூறினார். கீழே இறங்க மறுத்த அந்த நபர், தான் ஒரு காவல் துறை அதிகாரி. என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஒழுங்காக என்னை கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட வேண்டும் என கூறியுள்ளார்.

அரசு பேருந்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த காவலர்

இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர்,  கும்பகோணம் மேம்பாலம், நால்ரோடு, புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் செல்லும் நான்கு வழிச் சாலையின் குறுக்கே பேருந்தை நிறுத்தி இப்போது கீழே இறங்கவில்லை என்றால் பேருந்தை எடுக்க மாட்டோம் என கூறினார். பின்னர்  பஸ்சில் இருந்த மற்ற  பயணிகள் அந்த நபரை சத்தம்போட்டு கீழே இறக்கினர்.

அதோடு விடாமல் அந்த நபர், பேருந்து முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால் நான்கு வழிச்சாலையில் நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் கும்பகோணம் மேற்கு போலீசார் மதுபோதையில் இருந்த அந்த நபரை இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அவரிடம் காவல் துறையினர்  விசாரணை நடத்தியபோது அவர் தன்னுடைய கர்ச்சீப் கீழே விழுந்து விட்டது அதனை குனிந்து எடுக்கும் போது தெரியாமல் அந்த பெண் மீது கை பட்டுவிட்டது என போதையில் கூறினார்.

அரசு பேருந்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த காவலர்

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வரும் தாஸ் என்பதுதெரியவந்தது. இதற்கிடையே அவர் மீது யாரும் புகார் அளிக்காததால் அவரை போலீசார் அனுப்பி வைத்துவிட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து காவல் துறையிடம் கேட்டபோது,  “இதனை செய்தியாக பிரசுரிக்க போகிறீர்களா. அவர் யார் என்று தெரியவில்லை. எஸ்.பி. அலுவலகத்தில் எந்த பிரிவில் உள்ளார் என்று தெரியவில்லை. இது போன்ற தகவல்கள் எங்களுக்கு வரவில்லை” என அவரை காப்பாற்றும் விதமாக பதில் கூறினர்.

அரசு பேருந்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த காவலர்

தஞ்சை மாவட்டத்தில் டிஐஜி மற்றும் எஸ்பி பெண்களாக இருக்கின்றார்கள். ஆனால் பாதுகாக்க வேண்டிய காவலரே, பேருந்தில் செல்லும் பெண்ணிடம், தகாத முறையில் தொடர்ந்து  ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget