மேலும் அறிய

தஞ்சாவூரில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

புதியதாக போடப்பட்டு வரும் தஞ்சாவூர்-விக்கரவாண்டி பைபாஸ் சாலையில் முதன் பலியாக மூன்று பேர் பலியானது குறிப்பிடத்தக்கது

தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவில்-கும்பகோணம் பைபாஸ் கடகடப்பை பகுதியில் அதிகாலை 2 மணியளவில் சாலையின் சென்டர் மீடியனில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த மூன்று வாலிபர்கள் மீது கும்பகோணம் சென்ற லாரி மோதியதில் பரிதாபமாக இறந்தனர். தஞ்சை அருகே நாட்டாணியை சேர்ந்தவர் பிரசாத் (41). காண்டிராக்ட் வேலை செய்து வந்தார். மாரியம்மன் கோவில் மருங்கை கிராமத்தை சேர்ந்த சுதாகர் (27), அசூரமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் (32). இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள்.  அதிகாலை பிரசாத், சுதாகர் ஆகியோர் காரிலும், பைக்கில் சந்திரசேகரும் தஞ்சை அடுத்த கடகடப்பை பகுதியில் புதிதாக போடப்பட்டு வரும் கும்பகோணம் பைபாஸ் சாலைக்கு சென்றனர்.

தஞ்சாவூரில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இவர்கள் மூன்று பேரும், ரிலாக்ஸ ஆன நாட்களில் ஆள் நடமாட்டம் இல்லாத புதிய பைபாஸ் சாலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இதே போல் மூன்று பேரும் அங்கு பைபாஸ் சாலையோரம் கார், மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்டர் மீடியனில் 3 பேரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற லாரி  கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பிரசாத், சுதாகர், சந்திரசேகர் ஆகிய 3 பேர் மீதும் மோதியது. மேலும் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் மீதும் மோதியது.  

இந்த கோர விபத்தில் பிரசாத், சுதாகர், சந்திரசேகர் ஆகியோர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். கார், மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. விபத்தை ஏற்படுத்திய டிரைவர்,  லாரியை சாலையிலேயே நிறுத்திவிட்டு விட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு  சென்று விபத்தில் இறந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூரில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்-விக்கரவாண்டி பைபாஸ் சாலை பணி பெரும்பாலான பகுதிகளில் முடிந்து விட்டதால், சாலையில் வாகனஙகள் வராது என்பதற்காக சாலை மற்றும் சென்டர் மீடியனில் பேசி கொண்டிருக்கின்றார்கள். சிலர் மது அருந்துகின்றார்கள். போலீசார் வாகன ரோந்து சென்று, இரவு நேரங்களில் நிற்பவர்களை அறிவுரை கூறி அனுப்பி வைக்க வேண்டும்.  புதியதாக போடப்பட்டு வரும் தஞ்சாவூர்-விக்கரவாண்டி பைபாஸ் சாலையில் முதன் பலியாக மூன்று பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வளையபேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் (36) டாட்டா ஏசி டிரைவர். இவர் சுந்தரபெருமாள் கோயில்  பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது, கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற டூரிஸ்டர் வேன், டாட்டா ஏசி வாகனம் மீது மோதியது. இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  டூரிஸ்டர் வேனில் வந்த கும்பகோணம் செம்போடையை சேர்ந்த மணிகண்டன் (40), காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தப்பி ஓடிய டூரிஸ்ட் வேன் டிரைவரை சுவாமிமலை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் பகுதியில் இரு வேறு சாலை விபத்துக்களில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Embed widget