மேலும் அறிய

தஞ்சாவூரில் அதிர்ச்சி! வீட்டு சிமெண்ட் தளத்தில் 14 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் மீட்பு!

அருங்கானூர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளைக்கு நேற்று முன்தினம் 5ம் தேதி இரவு தகவல் தெரிவித்தார். சற்று நேரத்தில் ஒன்றல்ல இரண்டு பாம்புகள் இருப்பதாக கணேசன் தெரிவித்தார். 

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வீட்டின் சிமெண்ட் தளத்தின் உட்புறத்தில் இருந்த 14 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகளை அருங்கானூர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை காப்பகத்தை சேர்ந்த உயிரின காப்பாளர்கள் பாதுகாப்பாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 
தஞ்சாவூர் மாதா கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி, பத்தாவது தெருவில் வசிக்கும் கணேசன் என்பவர் தனது வீட்டு சுற்றுப்புற சுவரில் பாம்பு தென்பட்டதாக அருங்கானூர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளைக்கு நேற்று முன்தினம் 5ம் தேதி இரவு தகவல் தெரிவித்தார். சற்று நேரத்தில் ஒன்றல்ல இரண்டு பாம்புகள் இருப்பதாக கணேசன் தெரிவித்தார். 


தஞ்சாவூரில் அதிர்ச்சி! வீட்டு சிமெண்ட் தளத்தில் 14 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் மீட்பு!

தொடர்ந்து காப்பக நிறுவனர் சதீஷ்குமார் ராஜேந்திரன், அன்பொளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு பாம்பை தேடி பார்த்துள்ளனர். அப்போது சுற்றுப்புறத்தின் சிமெண்ட் தரையின் அடிப்பகுதியில் காணப்பட்ட விரிசலை கண்டுபிடித்தனர். அதன் உள்ளே பாம்பு இருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து அந்த சிமெண்ட் தளத்தை பாதுகாப்பாக உடைத்து பார்த்தபோது, கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் 14 எண்ணிக்கையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாம்பு குட்டிகள் அனைத்தும் சில நாட்களுக்கு முன்புதான் பிறந்தவை என்று ஆராய்ந்ததில் தெரியவந்தது. பின்னர் அவை அனைத்தும் மிகவும் பாதுகாப்புடன் மீட்கப்பட்டன. மேலும் அந்த இடத்தில் தாய் பாம்பின் சட்டை உரிக்கப்பட்டு கிடந்தது. பின்னர் கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் அனைத்தும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாப்பான வனப்பகுதியில் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதுகுறித்து அருங்கானூர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (இவெட்) நிறுவனர் சதீஸ்குமார் ராஜேந்திரன் கூறுகையில், சிமெண்ட் தளத்தில் இருந்த விரிசல் உள்ளே சென்று தாய் கண்ணாடி விரியன் குட்டிகளை ஈன்று விட்டு சட்டையை உரித்து விட்டு சென்றுள்ளது. அந்த குட்டிகளில் ஒன்றிரண்டு வெளியேறி இருக்கலாம். அதை பார்த்து வீட்டு உரிமையாளர் தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து அவரது வீட்டை ஆராய்ந்து பார்த்து விரிசல் உள்ளே பாம்பு குட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இதுபோன்று உங்கள் வீடுகளில் பாம்புகள் தென்பட்டால் அருங்கானூர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை காப்பகத்திற்கு தகவல் தெரிவியுங்கள். பாம்புகளை உயிருடன் மீட்டு பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

தஞ்சை நகர் பகுதியில இவெட் அறக்கட்டளை நிர்வாகத்தினர் பல்வேறு இடங்களில் வீடுகளில் புகுந்த பாம்புகளை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்து வனப்பகுதியில் விட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இதேபோல் மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் ஒரு வீட்டிற்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை மீட்டனர். அந்த பாம்பு அடுத்த 2 நாளில் 22 குட்டிகளை ஈன்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget