மேலும் அறிய
டாஸ்மாக் கடையில் நேற்று ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு விற்பனை
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 160 கோடி ரூபாய் அளவிற்கு டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நடந்துள்ளது.

tasmac_crowd_2
தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுவதால் ஏப்ரல் 4ம் தேதி முதல் ஏப்ரல் 6 ம் தேதி வரை தமிழக டாஸ்மாக் கடைகளை அடைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து கடை இருக்காது என்பதால் நேற்று ஏப்ரல் 3 ம் தேதியே மதுபானங்களை வாங்க டாஸ்மாக் கடை முன்பு குடிமகன்கள் குவிந்தனர்.

இரவு குறிப்பிட்ட நேரம் வரை நடந்த விற்பனையில் வழக்கத்தை விட அதிக அளவில் மதுபானம் விற்பனையாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. மூன்று நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி இருப்பு வைக்க குடிமகன்கள் காட்டிய ஆர்வமே அதிக மதுவிற்பனைக்கு காரணமாக கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















