"தன்னிகரற்ற கலைஞனுக்கு தாதாசாகேப் பால்கே விருது" - ரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..
தன்னிகரற்ற கலைஞன் சூப்பர் ஸ்டாருக்கு தாதாசாகேப் விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகரும், ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவருமான ரஜினிகாந்திற்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்தது. இதையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் @rajinikanth-க்கு, #DadasahebPhalkeAward கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது!

நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்! pic.twitter.com/VFYsXWoAhC
— M.K.Stalin (@mkstalin) April 1, 2021

இந்த நிலையில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், "இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது! நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துக்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.