கோவை தெற்கு தொகுதியை இந்தியா திரும்பி பார்க்கும் என கமல் இறுதி பரப்புரை
நான் வெற்றி பெற்றால் கோவை தெற்கு தொகுதியை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே திரும்பிப் பார்க்கும் என மநீம தலைவர் மகல் இறுதிகட்ட பரப்புரை மேற்கொண்டார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், தனது இறுதி கட்ட பிரசாரத்தை திறந்தவெளி வாகனத்தில் ஈடுபட்டார். அவருடன் ராதிகா சரத்குமாரும் பங்கேற்றார்.
அப்போது பேசிய கமல், ‛எனது எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக தான். இயற்கையே என்னை இங்கு அழைத்து வந்துவிட்டது. இயற்கை தான் என்னை இங்கே தேர்வு செய்தது. நானும் இது தான் எனது எஞ்சிய வாழ்க்கை என்பதை முடிவு செய்துவிட்டேன். தேர்தல் முடிந்ததும் நான் சினிமாவுக்கு சென்று விடுவேன் என்கிறார்கள். இப்போது என் பேச்சை கேட்கும் நீங்கள் அனைவரும் இந்த கூட்டம் முடிந்ததும் எங்கு செல்வீர்கள். வீட்டிற்கு தானே. அப்படி தான் நானும்.
இங்கு யாருமே முழுநேர அரசியல்வாதி அல்ல. என்னை மட்டும் ஏன் அப்படி இருக்க கூறுகிறார்கள். என்னை தேர்வு செய்யுங்கள், கோவை தெற்கு தொகுதியை தமிழகம் அல்ல இந்தியாவே திரும்பிப்பார்க்கும்,’ என்றார்.