Karthigai Deepam: சம்மதிக்க மறுக்கும் சாமுண்டீஸ்வரி.. ஒட்டுக்கேட்கும் கார்த்தி்க் - அடுத்து என்ன நடக்கும்?
கார்த்திகை தீபம் சீரியலில் நிலத்தை தானமாக வழங்க சாமுண்டீஸ்வரி மறுப்பு தெரிவிக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரமேஸ்வரி பாட்டி கோவிலுக்கு நிலத்தை எழுதி வைப்பதாக சொல்லிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
உங்க அம்மாவுக்காக நான் கையெழுத்து போடனுமா?
அதாவது நிலம் ராஜராஜன் மற்றும் சாமுண்டீஸ்வரி பெயரில் இருப்பதாக பரமேஸ்வரி பாட்டி சொல்ல அப்படி என்றால் அம்மா கையெழுத்து போட வேண்டுமே என்று ரேவதி அதிர்ச்சி அடைகிறாள்.
பிறகு ரேவதி வீட்டில் இருக்க சாமுண்டீஸ்வரி அவளுக்கு பழத்தை கொடுத்து சாப்பிட சொல்லி அக்கறையாக பார்த்துக் கொள்ள, அப்போது ராஜராஜன் கோவிலுக்கு நிலம் தர கையெழுத்து போட வேண்டும் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி உங்க அம்மாவுக்காக நான் எதுக்கு கையெழுத்து போடணும் அவங்க என் அம்மாவை கொன்னவங்க.. உங்களுக்கு தெரியாதா என்று கோபப்படுகிறாள்.
ஒட்டுக் கேட்கும் கார்த்திக்:
இதையடுத்து கார்த்தியிடம் விஷயத்தை சொல்கின்றனர். அடுத்ததாக சமாண்டீஸ்வரி சூலையில் வேலை செய்பவர்களுக்காக கார்த்தியிடம் பணத்தை கொடுக்க, அவன் வேறு வேலை இருப்பதாக சொல்லி சந்திர கலாவிடம் கொடுத்து அனுப்புகிறான். கூடவே அவளுக்கு தெரியாமல் ஒரு போனையும் ஆன் செய்து அனுப்பி வைத்து சந்திரகலா என்ன பேசுகிறாள் என்பதை தெரிந்து கொள்ள திட்டமிடுகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















