(Source: ECI/ABP News/ABP Majha)
யூடியூபர் இர்ஃபான் விவகாரம்: மருத்துவமனை 10 நாட்கள் செயல்பட தடை: அதிரடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
YouTuber Irfan: யூடியூபர் இர்ஃபான் விவகாரத்தில், மருத்துவம் பார்த்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யூடியூபர் இர்ஃபான், மருத்துவமனையில் அவரது குழந்தையின் தொப்புள் கொடியை அறுக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், நடவடிக்கை பாய்ந்து வருகிறது.
இர்ஃபான் சர்ச்சை :
கடந்த ஜூலை24 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் இர்ஃபானுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து இர்ஃபான் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி வெளியிட்டார். அதில், பிரசவத்தின் போது தனது மனைவியின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டும் வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்கள். இதற்கு பலரும்,சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
அமைச்சர் மா.சு கண்டனம்
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிக்கையில் “ இர்பான் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்று மருத்துவர் அல்லாத ஒருவர் தொப்புள் கொடியை அறுத்தது தேசிய மருத்துவ சட்ட விதிகளை மீறியது.எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டப்படி நோட்டீஸ் கொடுத்துள்ளோம். தொப்புள் கொடியை அறுக்க அனுமதித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க புகார் தரப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் மீதுதமிழ்நாடு மருத்துவ இயக்குனரத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இர்பான் மீது புகார் அளித்துள்ளோம்,காவல்துறை மூலம் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். இர்பான் மனைவிக்கு ஸ்கேன் எடுத்து வெளியிட்ட விவகாரத்தில் தமிழகத்தில் மட்டும் தான் தடை துபாயில்சென்று எடுத்ததால் மன்னிப்பு கேட்டதால் அதனை ஏற்றுக் கொண்டோம்.
மருத்துவமனை மீது நடவடிக்கை:
அதனால்நடவடிக்கை இல்லை இங்கு செய்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம். தொப்புள்கொடி விவகாரத்தில் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் சுகாதாரத்துறை விடமாட்டோம்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மருத்துவம் பார்த்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனை 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது . மேலும், மருத்துவமனைக்கு ரூ. 50 ,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தொப்புள் கொடி அறுப்பு விவகாரம் - மருத்துவமனைக்கு 10 நாட்களுக்கு தடை#Irfancontroversy #Irfan #Tamilnews pic.twitter.com/dEeQZsBqKS
— ABP Nadu (@abpnadu) October 23, 2024