காதலுக்கு எதிர்ப்பு: சினிமா பட பாணியில் தப்பித்து காதலனை கரம் பிடித்த இளம்பெண்
திருமணத்திற்கு 2 நாட்கள் உள்ள நிலையில் இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வின் தேவகுமார், இவருடைய மகள் பெமிஷா ஆவார். அதேபோல மேற்கு நெய்யூரை சேர்ந்த ஸ்ரீராம் என்பவருடன் முதல் நட்பு மலர்ந்தது. பின்பு கால போக்கில் நட்பு காதலாக மாறியது. ஸ்ரீராம் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இருவரும் அடிக்கடி தொலைப்பேசியில் பேசி கொள்வது, விடுமுறை நாட்களில் சந்திப்பது என்று இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததனர். இந்த காதல் கிட்டதட்ட 6 வருடங்களுக்கு மேலாக நீடித்தது.
இந்நிலையில் இருவரின் காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரிய வந்தது. உடனே பென்ணின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து பெமிஷாவை, அவரது தந்தை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் நான் திருமணம் செய்தால் அவரை தான் செய்துகொள்வேன் என்று உறுதியாக கூறிவிட்டார்.
இதனால் கோபம் அடைந்த செல்வின் தேவகுமார், தன் மகளை வீட்டில் வைத்து பூட்டினார். பின்பு தந்தையின் பேச்சை கேட்டால் மட்டுமே இந்த வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியும் என்று நினைத்தார். அதேசமயம் பெமிஷாவிற்கு , மாப்பிளை பார்க்க தொடங்கினார் அவரது தந்தை.
காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்
சில நாட்களுக்கு பிறகு திருமணத்திற்கு நான் ஒப்புக்கொள்கிறேன் என்று தந்தையிடம் பெஷிமா தெரிவித்தார். உடனடியாக திருமணம் தேதியை குறித்து, மற்ற வேலைகளை பெஷிமா குடும்பத்தினர் தொடங்கினார். நாளை மறுநாள் திங்கள் கிழமை திருமணம் நடத்த திட்டமிட்டனர்.
திருமணம் நாள் நெருங்க நெருங்க பெஷிமாவிற்கு அச்சம் ஏற்பட்டது. எப்படியாவது இங்க இருந்து தப்பி செல்ல வேண்டும் என்று திட்டம் போட்டார். பலமுறை தப்பிக்க முயற்சி செய்தபோதும் அவரால் முடியவில்லை. இந்நிலையில் நேற்று வீட்டின் பின்புறம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அவரது குடும்பத்தினார் தீவிரமாக கண்கானித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென பெஷிமா அருகே உள்ள சுவரில் ஏறி குதித்து தப்பித்து சென்றார். உடனடியாக தனது காதலன் ஸ்ரீராமை நேரில் சந்தித்து நடந்த அனைத்து பிரச்சனைகளையும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இருவரும் குளச்சல் காவல்நிலையத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.
காதலனை கரம் பிடிக்க சுவர் ஏறி குதித்த இளம்பெண்
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இருவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இருவரின் பெற்றோர்களும் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். பெஷிமாவின் பெற்றோர் இந்த காதல் திருமணத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, ஆகையால் எங்களது மகளை அனுப்பி வைக்குமாறு காவல்துறையிடம் கூறினர்.
ஆனால், பெஷிமா நாங்கள் இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேல் காதலிக்கிறோம். நான் ஸ்ரீராமுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விருப்பப்படுகிறேன் என காவல்துறையிடம் உறுதியாக கூறிவிட்டார்.
தொடர்ந்து இருவரும் மேஜர் என்பதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என இரு குடும்பத்தினரிடமும் காவல்துறையினர் தெரிவித்தனர். பின்பு காதல் ஜோடிக்கு அறிவுரை வழங்கி பதிவு திருமணம் செய்யுமாறு கூறி காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
திருமணத்திற்கு 2 நாட்கள் உள்ள நிலையில் இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.