மேலும் அறிய

Yercaud Flower Show 2025: சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்... ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி விரைவில் ஆரம்பம்.

ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே மாதம் 22 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 31 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்காட்டில் 48வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இந்த மாத இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து செய்து வருகிறது. 48வது ஏற்காடு மலர் கண்காட்சிக்கான இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே மாதம் 22 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 31 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை மாவட்ட ஆட்சியர் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Yercaud Flower Show 2025: சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்... ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி விரைவில் ஆரம்பம்.

மலர் கண்காட்சி:

கடந்த ஒரு வாரமாக ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருவதால் நல்ல சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. குறிப்பாக ஏற்காடு ரோஜா என்றழைக்கப்படும் டேலியா மலர்கள் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பூத்து குலுங்குகின்றன. மேலும் மேரி கோல்டு, டேலியா, வெர்பினா, பிளாக்ஸ் உள்ளிட்ட மலர் வகைகளும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. ஊட்டி மற்றும் கொடைக்கானலில் இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனிடையே பல லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு நடைபெறும் பிரம்மாண்ட மலர்க் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு மட்டுமல்ல மனதுக்கும் விருந்து படைக்க காத்திருக்கிறது.

கோடை விழா நிகழ்ச்சிகள்:

மேலும், மலர் கண்காட்சியில் மலைப்பகுதிகளில் விளையக்கூடிய பல்வேறு பழங்களைக் கொண்டு பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்படும். மலர்க்கண்காட்சி நடைபெறும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலை ஏற்றம் (டிரக்கிங்), கைப்பந்து போட்டிகள், கயிறு இழுத்தல் போட்டிகள், மராத்தான், சைக்கிளிங், சிலம்பம், படகு போட்டி, கிரிக்கெட் போட்டிகள். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள் கண்காட்சி மற்றும் சுற்றுலாத்துறை, கலைப்பண்பாட்டுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நாள்தோறும் பல்வேறு இன்னிசை, கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Yercaud Flower Show 2025: சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்... ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி விரைவில் ஆரம்பம்.

சிறப்பு பேருந்து:

ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்ந்திடும் வகையில் உள்வட்ட சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இச்சிறப்பு பேருந்து கோடை காலம் முடியும் வரை காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேக்கேஜ் பேருந்து புறப்படும். ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய 11 இடங்களை கண்டு கழித்து மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாலை 7.00 மணிக்கு பேக்கேஜ் நிறைவு செய்யும் வகையில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்துக்கு ஒரு பயணிக்கு ரூ.300 கட்டணமாகவும், 1/2 கட்டணம் ரூ.150/- ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளின் வசதிக்காக பேக்கேஜ் பயணத்திற்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையத்தளம் www.tnstc.in மற்றும் App (tnstc bus ticket booking app) வழியாகவும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
iPhone 16 Discount: ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Most Cheapest Cars India: சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
Embed widget