”நானும் ரவுடிதான் என்ன செய்ய முடியும் உன்னால” - மாஸ்க் போடுமாறு சொன்ன காவலரை மிரட்டிய பெண்..

இளம்பெண் ஒருவர் நானும் ரவுடிதான் என்னால் மாஸ்க் அணிய முடியாது உன்னால் என்ன செய்யமுடியுமோ செய்துகொள் என காவலர்களை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

FOLLOW US: 

கொரோனா தொற்று பரவிவரும் சூழ்நிலையில் காவலர்களை பணி செய்ய விடாமல் இளம்பெண் ஒருவர் நானும் ரவுடிதான் என்னால் மாஸ்க் அணியமுடியாது உன்னால் என்ன செய்யமுடியுமோ செய்துகொள் என காவலர்களை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதால் அந்தந்த ஆட்சியர்கள் தலைமையில் சமூக இடைவெளி பின்பற்றவும் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.”நானும் ரவுடிதான் என்ன செய்ய முடியும் உன்னால” - மாஸ்க் போடுமாறு சொன்ன காவலரை மிரட்டிய பெண்..

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவலர்கள் மாஸ்க் அணியாமல் வருபவர்களை மாஸ்க் அணிந்து செல்லுமாறு வலியுறுத்தி வருகிறார்கள். அந்த நேரத்தில் இளம்பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் மாஸ்க் அணியாமல் வந்த போது காவலர்கள் அவரை மாஸ்க் அணிந்து செல்லும்படி கூறியுள்ளனர். அதற்கு அந்தப்பெண் மாஸ்க் என்னால் அணியமுடியாது எனவும் இந்த சிறிய மாஸ்க்கிற்கு 200 ரூபாய் அபராதம் அதிகம் எனவும் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது காவலர் இது ஆட்சியர் உத்தரவு எனவும் கட்டாயம் மாஸ்க் அணிந்துதான் செல்லவேண்டும் எனவும் மீண்டும் அறிவுறுத்தினார். ”நானும் ரவுடிதான் என்ன செய்ய முடியும் உன்னால” - மாஸ்க் போடுமாறு சொன்ன காவலரை மிரட்டிய பெண்..

அதற்கு அந்த பெண் ஆட்சியரை அழைத்து வாருங்கள் எனவும், கொச்சை வார்த்தைகளால் காவலரை திட்டித்தீர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக ”நானும் ரவுடிதான் உன்னால் என்ன செய்யமுடியுமோ செய்துகொள்” என ஆக்ரோஷமாக பேசும் வார்த்தைகள் பதிவாகி உள்ளது. மேலும் வீடியோ எடுத்தால் எடுத்துக்கொள் என்னை எதுவும் செய்ய முடியாது எனவும் பகிரங்கமாக மிரட்டும் இந்த இளம்பெண் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. மக்களின் நலன்கருதி அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை வென்று மீண்டு வரமுடியும் என்பதை மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

Tags: mask Thanjavur Women threatening Police thanjavur district news

தொடர்புடைய செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்

டெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்

திருவண்ணாமலை : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் அதிகரிப்பு..!

திருவண்ணாமலை : குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை : தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் அதிகரிப்பு..!

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

டாஸ்மாக் உருவான வரலாறு : மது நுழைந்த காரணமும் அதனால் ஏற்பட்ட ரணமும்..!

டாஸ்மாக் உருவான வரலாறு : மது நுழைந்த காரணமும் அதனால் ஏற்பட்ட ரணமும்..!

காஞ்சிபுரம் : செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுக்குள் வருமா கொரோனா தொற்று?

காஞ்சிபுரம் : செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுக்குள் வருமா கொரோனா தொற்று?

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!