Weather Forecast: சென்னையில் பல இடங்களில், அதிகாலை முதலே அடித்துப்பெய்தது மழை..
காலை 8 மணி நேர நிலவரப்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் திருவல்லிக்கேணி, ராணிப்பேட்டை, நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, அம்பத்தூர், வேளச்சேரி பகுதிகளில் அதிகாலை பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மதுரை, மயிலாடுதுறையில் கனமழை பெய்துது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பெய்த மழையால் பல்வேறு அணைகள் நிரம்புகின்றன.
இதனிடையே, சென்னை, விழுப்புரம், நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று மழைக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 8 மணி நேர நிலவரப்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
Inimai Ithu namma kalam
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) October 5, 2021
Going to be a awesome spell for Chennai (KTCC). Not only for KTCC, entire North TN like Cuddalore, pondy, Vellore, Ranipet, Tv Malai, Villupuram, Delta belt in Nagai, Tiruvarur alll going to rock. Even south TN areas like Kanyakumari will get good rains. pic.twitter.com/MwrI4Q6jMp
மேலும், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பொழியும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இங்கு மட்டுமல்லாமல், வடதமிழகமான கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியிலும், டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற தென் தமிழக பகுதிகளில் கூட நல்ல மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.
.
Weather forecast for next 7 days-Chennai pic.twitter.com/Nnn0CWhy1w
— Tamilnadu Vaanilai(தமிழ்நாடு வானிலை) (@ChennaiRmc) October 4, 2021
— Tamilnadu Vaanilai(தமிழ்நாடு வானிலை) (@ChennaiRmc) October 4, 2021