புதர் மண்டி கிடக்கும் இடங்களில் காதல் ஜோடிகளின் வைரல் வீடியோ - கல்லூரி நிர்வாகம் விளக்கம்
’’செய்யாறு அரசு அறிஞர் அண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் புதர்மண்டிய இடத்தில் இருக்கும் காதல் ஜோடிகளின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆனது’’
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி 57 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கல்லூரியில் தினந்தோறும் சுழற்சி முறையில் காலை 8.30 முதல் 1.30 வரையும், மதியம் 1.30 முதல் 5.30 மணிவரையும் வகுப்புகள் நடைபெறுகின்றது. கல்லூரியில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த கல்லூரியில் 80 நிரந்தர பேராசிரியர்கள், 120 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். இந்த கல்லூரி வளாகத்தில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானமும் உள்ளது. இதில் வருடங்களாக பாழடைந்து பயன்பாட்டில் இல்லாமல் மாணவர் விடுதியும் உள்ளது. அதனை தொடர்ந்து கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் செடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளதால். இந்த செடிகளின் மறைவில் காதல் ஜோடிகள் தஞ்சமடைகின்றனர். இதில் அந்த கல்லூரியில் படிப்பவர்களும் இங்கு புதாரில் ஜோடியாக அமர்ந்து காலித்து வருகின்றனர். இவர்களில் ஒரு காதல் ஜோடிகள் சிலர் எல்லை மீறுவதும் மற்றும் உல்லாசமாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனை அவ்வழியாக சென்ற சிலர் தன்னுடைய தொலைபேசியில் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் அந்த வீடியோ வைரலாக பரவியதால் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் குடிமகன்களின் திறந்தவெளி பாராகவும் இந்த வளாகம் செயல்படுகிறது. மதுப்பிரியர்கள் இங்கு மது அருந்துகின்றனர். பின்னர் போதை ஏறியதும் பாட்டில்களை உடைத்து அங்கேயே வீசுகின்றனர். கண்ணாடி துண்டுகள் அப்பகுதியில் உள்ள நடந்து செல்லும் மக்களின் பாதங்களை பதம் பார்க்கிறது. கல்லூரிக்கு முழுமையான சுற்றுச்சுவர் இல்லாததே சமூக விரோத செயல்கள் நடக்க காரணமாக அமைந்துள்ளது. எனவே விளையாட்டு மைதான சுற்றுச்சுவரை முழுமையாக கட்டவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில் இருக்கும் மாணவ, மாணவிகள் எங்கள் கல்லூரியை சேர்ந்தவர்கள் இல்லை என்றும். கல்லூரி நேரத்தில் பாதுகாவலர் மூலமாக கல்லூரி வளாகத்தில் கண்காணித்து வருகிறோம். கல்லூரியின் சுற்றுச்சுவர் முழுமை பெறாமல் இருப்பதால் அந்த வழியாக செல்லும் மற்ற கல்லூரி மாணவர்கள் மட்டுமில்லாமல் இளைஞர்களும். வெளி ஆட்களும் மற்றும் சமூக விரோதிகளும் உள்ளே வந்து, இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
Reba Monica John | பிகில் நாயகி ரெபா மோனிகா ஜானின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!