Vikravandi by election: ஒரு தலைமுறையை அழிக்கும் நபருக்கு ஆயுள் தண்டனை - செளமியா அன்புமணி அதிரடி
பணத்தால் எதையும் விலைக்கு வாங்கலாம் என்ற கனவில் இருப்பவர்களுக்கு, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் தகுந்த பாடத்தை கற்பிக்கும் - செளமியா அன்புமணி
விழுப்புரம் : கள்ளச்சாராயத்தினை விற்பனை செய்வதன் மூலம் ஒரு தலைமுறையை அழிக்கும் நபருக்கு ஆயுள் தண்டனையை வழங்க சட்டதிருத்தம் கொண்டு வந்தது சரியானது என்றும் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தும் அதனை எடுக்க மாநில அரசு தயங்குவதாக செளமியா அன்புமனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து செளமியா அன்புமணி கோழிப்பட்டு, அத்தியூர் திருக்கை கிராமத்தில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பிற்கு பிறகு பேட்டியளித்த செளமியா அன்புமணி ராமதாஸ் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பதாகவும் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் சட்டதிருத்த மசோதா கொண்டு வந்தது நல்லச்சட்டம்.
வரவேற்பதாகவும் முதலில் கள்ளச்சாரயம் விற்பனை செய்பவர்களை பிடிக்க வேண்டும், அப்படி விற்பனை செய்பவர்களை பிடிக்காமல் கண்டும் காணாமல் இருந்தால் சட்ட திருத்த மசோதா ஏட்டளவில் மட்டுமே இருக்கும் என்றும் கள்ளச்சாராயத்தினை விற்பனை செய்வதன் மூலம் ஒரு தலைமுறையை அழிக்கும் நபருக்கு ஆயுள் தண்டனையை வழங்க வேண்டும், அது சரியானது தான் என தெரிவித்தார்.
சாதி வாரி கணக்கெடுப்பு என்பது எத்தனையோ மாநிலங்கள் செய்து கொண்டிருக்க நிலையில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தும் அதனை எடுக்க மாநில அரசு தயங்குவதாக கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாமக சார்பில் பல அறிக்கைகள் மண்டல மாநாடுகள் போன்றவைகள் நடத்தி சமூக நீதிக்காக பேசுகின்ற ஒரே கட்சி பட்டாளி மக்கள் கட்சி தேர்தல் என்றாலும் சரி சாதாரண நாள் எப்பொழுதும் சமூக நீதி குறித்து பேசுகின்ற கட்சியாக இருந்து வருதாக செளமியா அன்புமணி தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்து மருமகள் என்பதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க வந்துள்ளதாகவும், கல்வி அறிவு இல்லை, வேலைவாய்ப்பு இல்லை, ஆனால் சாராயம் எளிதாக கிடைப்பதாகவும், மக்களை ஏமாற்ற மொத்தமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு திமுகவினர் வந்துள்ளதாகவும் கூறினார்.