மேலும் அறிய

Vijayakanth Health: பழைய கேப்டனாக கர்ஜிக்கவேண்டும் ... விஜயகாந்த் உடல் நலம்பெற ரஜினிகாந்த் நெகிழ்ச்சி வாழ்த்து..

விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்ததோடு, பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்  உடல்நிலை சரியில்லாமல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக தேமுதிக கட்சி தலைமை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வழக்கமான சிகிச்சை என்றும், ஓரிரு நாளில் விஜயகாந்த வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்தின் வலது காலில் ரத்த ஓட்டம் இல்லாமல், அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக தேமுதிக சார்பில் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. 

இதனைக் கேட்டு ரசிகர்களும், கழக தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர். விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்ததோடு, பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்” என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் விஜயகாந்தின் திரையுலக நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் அவர் விரைவில் உடல் நல பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

அரசுப் பேருந்தில் உயிரைப் பணயம் வைக்கும் மாணவர்கள்! அதிர்ச்சி வீடியோ!
அரசுப் பேருந்தில் உயிரைப் பணயம் வைக்கும் மாணவர்கள்! அதிர்ச்சி வீடியோ!
வங்கக்கடலில் 7 மீனவர்கள் மாயம்: தேடலை நிறுத்தாதீர்! குடும்பங்களுக்கு உதவுங்கள்! அன்புமணி வலியுறுத்தல்
வங்கக்கடலில் 7 மீனவர்கள் மாயம்: தேடலை நிறுத்தாதீர்! குடும்பங்களுக்கு உதவுங்கள்! அன்புமணி வலியுறுத்தல்
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்....
தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Volkswagen Cheapest SUV: நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Embed widget