மேலும் அறிய

வங்கக்கடலில் 7 மீனவர்கள் மாயம்: தேடலை நிறுத்தாதீர்! குடும்பங்களுக்கு உதவுங்கள்! அன்புமணி வலியுறுத்தல்

வங்கக்கடலில் காணாமல் போன 7 ஆந்திர மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்: குடும்பங்களுக்கு உதவ வேண்டும் அன்புமணி கோரிக்கை

சென்னை: வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன ஆந்திரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உணவு மற்றும் நிதியுதவிகளை வழங்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

ஆந்திரப் பிரதேசம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் ஒடலரேவு கடற்கரையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 3&ஆம் தேதி வங்கக்கடலுக்கு சூறை மீன்பிடிப்புக்காக சென்ற 7 மீனவர்கள் காணாமல் போய், 14 நாள்களாகும் நிலையில், இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டிய நிலையில், தேடும் பணிகள் கைவிடப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன.

 

ஒடலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 3&ஆம் தேதி ஓடலரேவு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சூறை மீன்பிடிக்கச் சென்றனர். கர்ரி ராமுடு, கே ராமகிருஷ்ணா, எஸ் தாத்தாராவ், ஏசுதாசு, பலேபு சாந்தராவ், கொல்லட்டி ஸ்ரீனிவாஸ், சதீஷ் ஆகிய 7 மீனவர்களும் கடந்த 10 அல்லது 11&ஆம் தேதி துறைமுகம் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், கடைசியாக கடந்த 7&ஆம் தேதி குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட அவர்களை அதன்பின் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் படகு ஒதிஷா அல்லது மேற்கு வங்காள கடல்பகுதிக்கு காற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்கள், கடலோரக் காவல் படைக்கு சொந்தமான 5 கப்பல்கள், விமானப் படைக்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. அவர்கள் காணாமல் போனதாக கருதப்படும் பகுதியில் இருந்து 300 கடல் மைல் சுற்றளவில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காக்கிநாடா, விசாகப்பட்டினம், ஒதிஷா மாநிலம் பாரதீப் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் உதவியும் கோரப்பட்டிருக்கிறது. ஒதிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உதவிகள் கோரப்பட்டுள்ளன.

 

கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் தேடுதல் வேட்டையை குறை சொல்ல முடியாது. ஆனால், இரு வாரங்களாகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால், இன்னும் ஓரிரு நாள்களில் தேடும் பணிகளை நிறுத்த அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்களிடம் 1000 லிட்டர் டீசலும், 20 நாள்களுக்குத் தேவையான உணவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையான காற்று காரணமாக அவர்கள் வெகு தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அதனால், தேடுதல் தொலைவை சற்று அதிகரித்து பணிகளை தீவிரப்படுத்தினால், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து விடலாம். காணாமல் போன மீனவர்களில் மூவருக்குக் நீச்சல் கூட தெரியாது என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தேடும் பணிகள் கைவிடப்பட்டால், இதுநாள் வரை மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் வீணாகி விடும். எனவே, காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை தேடுதல் பணிகளை நீட்டிக்க வேண்டும் என்று ஆந்திர அரசையும், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைகளை கேட்டுக் கொள்கிறேன். காணால் போல மீனவர்கள் குடும்பத்தினருக்குஇ வாழ்வாதாரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தேவையான உணவு, நிதி ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

வங்கக்கடலில் 7 மீனவர்கள் மாயம்: தேடலை நிறுத்தாதீர்! குடும்பங்களுக்கு உதவுங்கள்! அன்புமணி வலியுறுத்தல்
வங்கக்கடலில் 7 மீனவர்கள் மாயம்: தேடலை நிறுத்தாதீர்! குடும்பங்களுக்கு உதவுங்கள்! அன்புமணி வலியுறுத்தல்
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்....
தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்...
Chennai Port Outer Harbour Project: ₹17,700 கோடியில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரம்மாண்ட திட்டம்! சென்னையில் என்ன நடக்கப்போகிறது? முழு விவரம்!
₹17,700 கோடியில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரம்மாண்ட திட்டம்! சென்னையில் என்ன நடக்கப்போகிறது? முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Volkswagen Cheapest SUV: நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
Hyundai Cars Price Hike: ஹூண்டாய் கார் வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; அடுத்த மாதம் விலைகள் உயருது; காரணம் இதுதான்
ஹூண்டாய் கார் வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; அடுத்த மாதம் விலைகள் உயருது; காரணம் இதுதான்
Embed widget