Vijayakanth Death: உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது... விஜயகாந்த் மறைவுக்கு சிவக்குமார் இரங்கல்!
தமிழ் சினிமா, அரசியல் என இரண்டிலும் தவிர்க்க முடியாதவராக வலம் வரும் விஜயகாந்துக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்தார் விஜயகாந்த்:
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் சென்னை, மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். நடுவே உடல்நலன் தேறி வீடு திரும்பிய நிலையில், நேற்று முன் தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, இன்று காலை விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தேமுதிக தலைமை அலுவலகம் பகிர்ந்திருந்த நிலையில், இன்று காலை 6.10 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71.
தமிழ் சினிமா, அரசியல் என இரண்டிலும் தவிர்க்க முடியாதவராக வலம் வரும் விஜயகாந்துக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் என நேரிலும் சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிவக்குமார் இரங்கல்:
இந்த நிலையில், விஜயகாந்தின் மறைவுக்கு மூத்த நடிகர் சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி, "தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டருந்தவர். ஆயிரக்கணக்கில் ரசிகர்களை மாதம் ஒருமுறை நேரில் சந்தித்ததை கோபி படப்பிடிப்பில் பார்த்துள்ளேன். தி.நகர் ரோகிணி லாட்ஜில் உள்ள தன் அறையில் நண்பர்களை தங்கவைத்துவிட்டு படப்பிடிப்பு முடிந்து வந்து வெராண்டாவில் படுத்துக்கொள்வார்.
எளிமையானவர், நேர்மையானவர். நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது கமல், ரஜினியை மலேசிய கலைநிகழ்ச்சிக்கு நேரில் அழைக்கச்சென்று அவர்கள் கரம் பற்றி வேண்டிக்கொண்டவர். 'சாமந்திப்பூ' -படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார். 'புதுயுகம்' - படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார். கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Heart broken to hear the news 💔
— Silambarasan TR (@SilambarasanTR_) December 28, 2023
A hero in reel and real!
He will always be someone i looked upon as a brother! Rest in peace.
Your legacy will live on.#RIPCaptainVijayakanth #Vijayakanth #CaptainVijayakanth pic.twitter.com/5k1v5uXRwA
இவரை தொடர்ந்து நடிகர் சிம்புவும் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் சிம்பு தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "நடிகர் விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டு எனது இதயம் உடைந்தது. அனைவரையும் ஒருவராக பார்க்கும் குணம் கொண்டவர் விஜயகாந்த். நடிகர் விஜயகாந்த், திரையிலும், நிஜவாழ்விலும் ஹீரோதான். விஜயகாந்தை நான் ஒரு சகோதரராகப் பார்த்தேன். மக்கள் மனதில் என்றும் வாழும் சகாப்தம் விஜயகாந்த்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க