மேலும் அறிய
Advertisement
பீஸ்ட் பட ரசிகர் காட்சி.. மறுக்கப்பட்ட டிக்கெட்.. சாலையை மறித்த விஜய் ரசிகர்கள்.. என்ன நடக்குது?
கடலூர் நியூ சினிமா திரையரங்கில் பீஸ்ட் படத்திற்கு ரசிகர் காட்சிக்கான டிக்கெடுகள் வழங்கப்படாது என கூறியதை கண்டித்து விஜய் ரசிகர்கள் கடலூர் புதுவை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடலூரில் பீஸ்ட் படத்திற்கு ரசிகர் காட்சிக்கான டிக்கெட் தர மறுத்ததால் விஜய் ரசிகர்கள் சாலை மறியல்
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் இன்று முதல் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.
இந்த சூழலில் கடலூரில் நகர் பகுதியில் அமைந்து உள்ள நான்கு திரையரங்கில் விஜயின் திரைப்படம் திரையிடப்பட உள்ள நிலையில் நான்கு திரையரங்கிலும் ரசிகர் காட்சிகள் வெளியிட வேண்டும் என்றும் அந்த காட்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒளிபரப்ப வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் கடலூர் பாரதி சாலையில் அமைந்து உள்ள நியூ சினிமா திரையரங்கில் டிக்கெட் விற்பனை தொடங்கியது ரசிகர்களும் டிக்கெட் வாங்க குவிந்தனர். அப்பொழுது விஜய் ரசிகர்கள் சார்பில் ரசிகர் காட்சி டிக்கெட் கேட்டு உள்ளனர் ஆனால் திரையரங்கம் சார்பில் டிக்கெட் தர மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் திடீர் என கடலூர் புதுவை சாலையான பாரதி சாலையில் திரையரங்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கடலூர் பாரதி சாலையில் மற்றும் அண்ணா பல முழுவதும் சுமார் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் கடலூர் புதுநகர் காவல் துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர. ஆனால் விஜய் ரசிகர்கள் கலைந்து செல்லாத காரணத்தால் காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி விஜய் ரசிகர்களையும் கலைத்தனர் மேலும் கடலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளான சீனு மற்றும் ராஜசேகர் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை காவல் நிலையத்திற்கு காவல் துறையினர் அழைத்து சென்றனர் சாலையில் இருந்து மேலும் சில ரசிகர்களையும் காவல் துறையினர் அழைத்து சென்றனர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பீஸ்ட் படம் வெளியாக ஒரு வாரம் உள்ள நிலையில் கடலூரில் இது போன்ற சம்பவம் நடைபெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடலூரில் பீஸ்ட் படத்திற்கான காலை 7 மணி காட்சி டிக்கெட் விலை 300 ரூபாய் எனவும் மற்ற காட்சிகள் 200 ரூபாய்க்கும் டிக்கெட் விற்கப்படுகிறது இதனை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
காஞ்சிபுரம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion