மேலும் அறிய

Rain alert: இனிதான் ஆட்டம் ஆரம்பமே.. வியாழன் முதல் பேய்மழை..! வெதர்மேன் கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா..?

தமிழகத்தில் வரும் 11 முதல் 14ம் தேதி வரை தமிழகத்தில் மிக கன மழை பெய்யும் என தமிழ்நாட்டின் வெதெர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 11 முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் மிக கன மழை பெய்யும் என தமிழ்நாடு வெதெர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவு நேரங்களில் அவ்வப்போது கன மழை பெய்யும் என பிர்தீப் ஜான் கூறியுள்ளார். மேலும் இது வெறும் ட்ரைலர் தான் இனிமேல் தான் மழையின் ஆட்டம் இருக்கும் என்றும் வரும் 11ம் தேதி முதல் 12ம் தேதி வரை மழை வெளுத்து வாங்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் அவர் பதிவிட்ட பதிவில், கடந்த நாட்களில் தமிழகத்தில் பெய்த மழை விட 11-14 ஆம் தேதி கனமழை பெய்யும். குறிப்பாக, சென்னையில் அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு  காற்றழுத்த தாழ்வு பகுதி இதே பகுதிகளில் உருவாகி, 9 முதல் 11 தேதிகளில்  வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வரும் 11ஆம் தேதி 15 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் எனவும் 12ம் தேதி தமிழகத்தில் 11 மாவட்டங்களிலும் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

08.11.2022 மற்றும் 09.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

10.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை, கடலூர்,  விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

11.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை, கடலூர்,  விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை,   திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, இராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி,  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

12.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம்,  செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,  திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

சென்னை நுங்கம்பாக்கம் 6, திருக்குவளை (நாகப்பட்டினம்) 5, மகாபலிபுரம் ( செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு) தலா 4, அண்ணாமலை நகர் (கடலூர்), கடவனூர் (கள்ளக்குறிச்சி), சிதம்பரம் AWS (கடலூர்), சிவகிரி (தென்காசி), சிதம்பரம் (கடலூர்), தொண்டையார்பேட்டை (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), பரங்கிப்பேட்டை (கடலூர்), மயிலாடி (கன்னியாகுமரி), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), கொள்ளிடம் (மயிலாடுதுறை), டிஜிபி அலுவலகம் (சென்னை), ராதாபுரம் (திருநெல்வேலி), சென்னை கலெக்டர் அலுவலகம் தலா 3 செ.மீ மழை பதிப்வாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

08.11.2022 மற்றும் 09.11.2022: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய  குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை  கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

10.11.2022 முதல் 12.11.2022 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய  குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும்  அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
Embed widget