மேலும் அறிய
திடீரென்று உள்வாங்கிய வேதாரண்யம் கடல் - அச்சத்தில் உறைந்த மீனவர்கள்
வேதாரண்யம் சன்னதி கடல் நேற்று திடீரென்று சுமார் 500 மீட்டர் கடல் உள்வாங்கியதால் அங்குள்ள மீனவர்கள் அச்சமடைந்தனர்.
![திடீரென்று உள்வாங்கிய வேதாரண்யம் கடல் - அச்சத்தில் உறைந்த மீனவர்கள் Vedaranyam Sannathi sea today suddenly absorbed about 500 meters of sea TNN திடீரென்று உள்வாங்கிய வேதாரண்யம் கடல் - அச்சத்தில் உறைந்த மீனவர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/09/36650c3a965a2d3a268cbb9a188d82621678339037214571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வேதாரண்யம் சன்னதி கடல்
வேதாரண்யம் சன்னதி கடல் நேற்று திடீரென்று சுமார் 500 மீட்டர் கடல் உள்வாங்கியதால் அங்குள்ள மீனவர்கள் அச்சமடைந்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியானது கோடியக்கரை பகுதியில் பாக்சலசந்தி சந்திக்கும் பகுதியாகும், கூடிய கரையில் வன உயிரினம் மற்றும் பறவைகள் சரணாலயம் உள்ளதால் நாள்தோறும் இங்கு நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் அவர்கள் கோடியக்கரை கடற்கரை மற்றும் வேதாரணியம் கடற்கரைக்குச் சென்று கடலை ரசித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், இன்று திடீரென்று சுமார் 500 மீட்டர் கடல் உள்வாங்கியதால் அங்குள்ள மீனவர்கள் அச்சமடைந்தனர். இதேபோல் சுற்றுலா வந்த நூற்றுக்கணக்கானோர் ஒருபுறம் அச்சமடைந்தாலும் கடல் உள்வாங்கியதையும் ரசித்து புகைப்படம் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து மீனவர்கள் தெரிவிக்கையில் கடந்த 2004 சுனாமிக்கு பிறகு கடல் பகுதியில் திடீர் திடீரென்று மாற்றங்கள் நடந்து வருவதாகவும் இன்று சுமார் 500 மீட்டருக்கும் அதிகமாக கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சமும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதாகவும் தற்பொழுது 500 மீட்டருக்கும் மேலாக கடற்பகுதி உள்வாங்கியதால் சேறும் சகதியாக காட்சியளிக்கிறது இதனால் வேறு ஏதும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறதோ என என மீனவர்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion