மேலும் அறிய

3-வது குழந்தை பெற சலுகை, குடும்ப கட்டுப்பாட்டுக்கு தடை - தமிழக அரசை வலியுறுத்தும் விசிக எம்பி ரவிக்குமார் - காரணம் என்ன?

தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதத்தின் சரிவைத் தடுத்து நிறுத்த உடனடியாகத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்பி ரவிக்குமார்

மூன்றாவது குழந்தை பெற குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக சலுகை அறிவிக்க வேண்டும் என்றும் கருத்தடை செய்து கொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் விசிக எம்பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதம் அபாயகரமான அளவில் குறைந்திருப்பது தொடர்பாக  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘அண்மையில் வெளியாகியிருக்கும் 2023-24 ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார சர்வே ( NFHS-6) அறிக்கையில் தமிழ்நாட்டைப் பற்றி வெளியாகியிருக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்திய அளவில் மொத்தக் கருவுறுதல் விகிதம் 2.0 ஆக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதம் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அது 1.7 என்ற அளவில் உள்ளது. இது இனிவருங்காலங்களில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும். இப்போதுள்ள மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்துகொண்டே போகும். 

ஒரு பெண்ணுக்குச் சுமார் 2.1 குழந்தைகள் என்ற மொத்தக் கருவுறுதல் விகிதமே (TFR) சமநிலைக்கு ஏற்றதாகும். கருவுறும் வயதை அடைவதற்கு முன்பே ஏற்படும் இறப்பு விகிதங்களையும் ஈடுகட்டியவாறு, ஒரு தாய் தனக்கும் தன் இணையருக்கும் 'ஈடுசெய்வதற்கு' இந்த விகிதம் வழிவகை செய்கிறது. 

இந்தியாவில் மொத்தக் கருவுறுதல் விகிதம் ஏற்கனவே மக்கள் தொகை அதிகமாக உள்ள உத்தரப்பிரதேசத்தில் 2.2 ஆகவும் பீகாரில் 2.7 ஆகவும் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது. இதனால் இப்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் ஒன்றிய அரசின் நிதியை அந்த மாநிலங்களே அதிகமாகப் பெறும். அத்துடன் தொகுதி மறுசீரமைப்பில் அந்த மாநிலங்களுக்குத்தான் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும். 

தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகித்தில் ஏற்பட்டிருக்கும் சரிவு இயற்கையாக ஏற்பட்டதல்ல. பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் இது ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் கருத்தடை செய்துகொள்வோரின் விகிதம் 36.5 ஆக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அது 56.6 ஆக உள்ளது. ஆண்கள் கருத்தடை செய்துகொள்ளும் விகிதமும்கூட தேசிய சராசரியைவிடத் தமிழ்நாட்டில் இரண்டு மடங்காக இருக்கிறது. 

தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதத்தின் (TFR) சரிவைத் தடுத்து நிறுத்த உடனடியாகத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளுவதை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை அறிவித்தல்; கருத்தடை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் எனத் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
Gandhipuram Bus Stand: ரூ.35 கோடியில் ஒட்டுமொத்தமாக மாறும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்.. கோவை மக்களுக்கு இனி ஜாலி தான்!
Gandhipuram Bus Stand: ரூ.35 கோடியில் ஒட்டுமொத்தமாக மாறும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்.. கோவை மக்களுக்கு இனி ஜாலி தான்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
திருவெறும்பூரில் உருவாகிறதா பிரம்மாண்ட பாதுகாப்பு–விண்வெளி தொழில் மையம்?
திருவெறும்பூரில் உருவாகிறதா பிரம்மாண்ட பாதுகாப்பு–விண்வெளி தொழில் மையம்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
Embed widget