vanathi srinivasan: கோவை தெற்கு தொகுதியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தலாம்? மக்களிடம் கருத்து கேட்கும் வானதி சீனிவாசன்
தங்களது கருத்துகளை, ஆலோசனைகளை கோரிக்கைகளை கீழே குறிப்பிட்ட வாட்ஸப் எண்ணிற்கு கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட அனைவரும் அனுப்பலாம்
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்வதற்கு பொதுமக்களிடம் ஆலோசனைகள் வானதி சீனிவாசன் ஆலோசனை கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழக அரசால் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக கோவை தெற்கு தொகுதிக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் வரையறைகளுக்கு உட்பட்டு கீழ்கண்ட பணிகளை நிறைவேற்றலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Inviting your suggestions/ demands for the #kovaisouthassembly development fund ..
— Vanathi Srinivasan (@VanathiBJP) December 23, 2021
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உங்கள் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகள் வரவேற்கிறோம்..@JPNadda @blsanthosh @annamalai_k @BJP4TamilNadu pic.twitter.com/S3GJXK13Tf
1. தமிழக அரசால் நடத்தப்படும் கல்விக் கூடங்கள், அங்கன்வாடி, மதிய உணவு மையம், மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனைகள், உடற்பயிற்சி மையங்கள் ஆகியவற்றுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள்.
2. ஆதிதிராவிடர், கள்ளர் மறுவாழ்வு பள்ளிகள், மனநலம் பாதித்த சிறுவர்களுக்கு உபகரணங்கள் வாங்குவது,
3. மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்குவது,
4. உயர்மின் கோபுர விளக்குகள், தார், கப்பி சாலைகள், விதிமுறைக்கு உட்பட்டு அமைப்பது,
5. மாநில போக்குவரத்துத் துறைக்கு வரையறுக்கப்பட்ட பணிகளை செய்வது,
6. அரசு திட்டத்தால் 31-12-2000- வரை கட்டப்பட்ட வீடுகள் மற்றும் இந்திரா ஆவாஸ் யோஜனா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளையும் பழுதுபார்க்கவும் விதிமுறைகளுக்கு உட்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கவும்.
7. நேரடி கொள்முதல் நிலையம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், பால் குளிரூட்டும் மையம் கட்டலாம்.
மேற்குறிப்பிட்ட பணிகளை கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் செய்வதற்கு தங்களது கருத்துகளை, ஆலோசனைகளை கோரிக்கைகளை கீழே குறிப்பிட்ட வாட்ஸப் எண்ணிற்கு கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட அனைவரும் அனுப்பலாம். வாட்ஸ்அப் எண்: 7200331442.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்