மேலும் அறிய

Vanathi Srinivasan: 'செந்தில் பாலாஜி எந்த தவறும் செய்யவில்லை என முதலமைச்சரால் கூற முடியுமா?' - வானதி சீனிவாசன் கேள்வி

”அரசியல் ரீதியாக பாஜக மீது பழி சுமத்த முடியுமா என முதல்வர் பார்க்கிறார். அவர் தவறு செய்யவில்லை என எங்கேனும் கூறி இருக்கிறீர்களா?” என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை ராம் நகர் பகுதியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

உச்சநீதிமன்றத்தை சொல்வாரா?

அப்போது பேசிய அவர், “பாஜக கடந்த 9 ஆண்டு காலமாக நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் செய்திருக்கக் கூடிய சாதனைகளைப் பற்றி எடுத்துரைப்பது, மத்திய அரசின் திட்ட பயனாளிகளை சந்திப்பது போன்ற நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடந்து வருகிறது. கோவையை பொருத்தவரை தனித்து நின்ற போதும் கூட உள்ளாட்சிப் பிரதிநிதிகளை பாஜக பெற்றிருந்தது. பாஜகவிற்கென இப்பகுதியில் குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதத்தை எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். 

தமிழகத்தின் சூழல் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்கா தற்போது வேறு நபர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உடல் நிலை காரணமாக, தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கிறார். இந்த கைதுக்கும் விசாரணைக்கும் மாநில அரசை நடத்துபவர்கள், முதலமைச்சர், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து கண்டன அறிக்கை விடுவது, கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது என பாஜகவும், பிரதமரும் காரணம் என்கின்ற ரீதியில் மக்கள் முன்பு தவறான கருத்துக்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தின் முதல்வர் எங்களை யாரும் மிரட்டி பார்க்க முடியாது பணிய வைக்க முடியாது எனக்கூறி வருகிறார். அவர் மத்திய பாஜக அரசை சொல்கிறாரா?, இல்லை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தை கூறுகிறாரா? என புரியவில்லை. 

தவறு செய்யவில்லையா?

அரசியல் ரீதியாக பாஜக மீது பழி சுமத்த முடியுமா என முதல்வர் பார்க்கிறார். அவரை துன்புறுத்துகிறார்கள் எனக் கூறும் இவர்கள், அவர் தவறு செய்யவில்லை என எங்கேனும் கூறி இருக்கிறீர்களா? செந்தில் பாலாஜி குற்றமற்றவர், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்று முதலமைச்சரால் சொல்ல முடியுமா? ஆக ஒருபுறம் இதற்கு முன்பாக நீங்கள் பேசியது இதெல்லாம் சினிமா படத்தில் வருவதைப் போல் இதெல்லாம் நீங்கள் தானா என்று கேட்பது போல் உள்ளது. அமலாக்கத்துறை விசாரணை என்பது உச்சநீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டு, அதன்படி நடந்து கொண்டிருக்கிறது. முழுமையாக விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட நபர்களுடைய கடமை. அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மாநில அரசாங்கத்தின் கடமை. 

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் ஒன்றாக நிற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறி மக்களை திசை திருப்புவதற்காக நாடகத்தை எல்லாம் நடத்த வேண்டாம் மக்கள் நம்ப போவதில்லை. அண்மை காலமாக எவ்வளவு ஊழல் நடக்கிறது எனக்கூறிக் கொண்டே வருகிறோம். அப்போதெல்லாம் ஆதாரம் கேட்ட செந்தில் பாலாஜி தற்போது ஆதாரத்தை கொண்டு வந்து காண்பித்த பிறகு, அய்யய்யோ துன்புறுத்துகிறார்கள் என்னை மிரட்டி பார்க்கிறீர்களா? என கூறுகிறார்கள். இதற்கெல்லாம் ஆதாரம் அமலாக்கத்துறையிடம் உள்ளது. அதற்கான பதிலை அவர் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். 

நீதிமன்ற நடவடிக்கை:

நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற மனபாங்கிலிருந்து முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் முதலில் வெளியில் வரவேண்டும். குற்றம் செய்பவர்களின் மாமன், மச்சான் மாப்பிள்ளை யாராக இருந்தாலும் சட்டப்படி அவர்கள் எதை எதிர் கொள்ள வேண்டுமோ அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி ஆட்சி கிடையாது. தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது நீதிமன்றம். சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை.

திமுகவிற்கே சம்பந்தம் இல்லாமல் பொய் பேசுவது தான் பழக்கம். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு வீட்டிற்கும் கொலுசு, ஹாட் பாக்ஸ், கொடுத்ததை எல்லாம் பார்த்துள்ளோம். மத்திய அரசில் இருக்கின்ற ஒவ்வொரு துறையும் சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்தத் துறைகளுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பாஜக ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் கூட பாஜக கட்சியினரே இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளார்கள்.

யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கிறார்கள். செந்தில் பாலாஜி முதல்வர் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறார் முதல்வரின் மனதிற்குள் போய்விட்டார். முதல்வரையே திட்டியவர் எப்படி அவரது மனதிற்குள் சென்று விட்டார் என்பதை அவரிடம் கேட்டு தான் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget