மேலும் அறிய
Valentine's Day: காதலர்களை கவர்ந்த பொருள்..அடேங்கப்பா சில மணி நேரத்திலேயே இப்படியா..?
ஃபயர் கேக்கில் காதலர் தின அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருக்கும். பின்னர் அதன் மேல் தீ வைத்தால் அவர்களது புகைப்படம் வரும். இதனால், இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
![Valentine's Day: காதலர்களை கவர்ந்த பொருள்..அடேங்கப்பா சில மணி நேரத்திலேயே இப்படியா..? Valentine's Day Introduction of fire cake on the occasion of lovers day in Karaikal - TNN Valentine's Day: காதலர்களை கவர்ந்த பொருள்..அடேங்கப்பா சில மணி நேரத்திலேயே இப்படியா..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/14/e3d65667963b0800d2ae8f3bdd1c27271707896378445113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காதலர் தின ஸ்பெஷல் கேக்
காரைக்காலில் காதலர் தினத்தை முன்னிட்டு ஃபயர் கேக் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் பேக்கரி திறந்த ஒரு சில மணி நேரத்திலேயே கேக் விற்று தீர்ந்தது.
பல்வேறு உலக நாடுகளில் அன்னோனியமாக பழகும் நபர்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் காதலர்கள் தங்கள் அன்பை, நேசத்தை, காதலை வெளிப்படுத்தும் விதமாக வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், பரிசு பொருட்கள், மலர்கள் ஆகியவற்றை 14ஆன் தேதி காதலர் தினத்தில் பரிமாறிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். காதலர்களே பெரும்பாலும் கொண்டாடுவதால் காதலர் தினம் என்றும் (lovers day) அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் காதலின் பெயரால் ரோசாப்பூ, இதய வடிவிலான பரிசுப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் விற்பனை படு ஜோராக நடைபெறும். இதில் ஒருபடி மேலாக காதலர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் பேக்கரியில் காதலர் தினத்தை முன்னிட்டு அன்பளிப்பாக வழங்குவதற்காக புதிதாக ஃபயர் கேக் அறிமுகம் செய்துள்ளனர். இந்த ஃபயர் கேக் சாக்லேட், ஸ்ட்ராபெரி உள்ளிட்ட பல்வேறு ரகத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
![Valentine's Day: காதலர்களை கவர்ந்த பொருள்..அடேங்கப்பா சில மணி நேரத்திலேயே இப்படியா..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/14/8ce052f6ebcdad0bbc275286537205ab1707896458311113_original.jpg)
இந்த ஃபயர் கேக்கில் காதலர் தின அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருக்கும். பின்னர் அதன் மேல் தீ வைத்தால் அவர்களது புகைப்படம் வரும். இதனால், இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பேக்கரியில் ஃபயர் கேக் குறித்து தகவல் தெரிந்த கல்லூரி மாணவர்கள் முதல் இளைஞர்கள் என அனைவரும் காலை முதலே கடையில் குவிந்ததால் கடை திறந்து சில மணி நேரங்களிலேயே கேக்குகள் முழுமையாக வெற்றி தீர்ந்தது. மேலும் கேக் தயாரிக்கும் பணியில் பேக்கரி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion