TN Assembly: இனி காவலர்களுக்கு ரூ. 4,500 சீருடைப்படி வழங்கப்படும்.. முதலமைச்சரின் மாஸ் அறிவிப்பு
காவலர்களுக்கு இனி சீருடைப்படி (Uniform Allowance) ரூ.4,500/- வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையில் காவலர்களுக்கு நலன் பயக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
அதில் முக்கியமாக,
1. காவலர்களுக்கு சீருடை மற்றும் இதர பொருட்கள் கொள்முதல் செய்து வழங்குவதற்கு பதிலாக சீருடைப்படி (Uniform Allowance) ரூ.4,500/- வழங்கப்படும்.
தற்போது காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான பணியாளர்களுக்கு வருடந்தோறும் சீருடைக்கான துணி சிறைத்துறையிடமிருந்தும் இதர பொருட்கள் காவல் தலைமையகத்திலிருந்தும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதற்குப் பதிலாக ரூபாய் கோடி செலவில் இப்பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.4500/- சீருடைப்படியாக வழங்கப்படும்.
2. காவலர் முதல் தலைமைக் காவலர்/சிறப்பு உதவி ஆய்வாளர் வரையிலான காவல் பணியாளர்களுக்கு எரிபொருள் படி (Fuel Allowance) உயர்த்தி வழங்கப்படும்
காவலர்,தலைமைக் காவலர்/ சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வரையிலான பணியாளர்களுக்கு தற்போது எரிபொருள் படியாக 5 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.370/- எரிபொருள் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. விலை உயர்வினை கருத்தில் கொண்டு எரிபொருள் படி மாதம் ஒன்றுக்கு ரூ.515/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.
3. ஆவடி மற்றும் தாம்பரம் மாநகர காவலர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.300/- வீதம் உணவுப்படி வழங்கப்படும்.
சென்னை மாநகர காவலர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே ஆவடி மற்றும் தாம்பரம் காவலர்களுக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 300 வீதம் மாதந்தோறும் அதிகபட்சம் 26 நாட்களுக்கு, உணவுப்படி வழங்கப்படும் இதற்காக ஆவடியைப் பொறுத்தளவில் ரூபாய் 10.21 கோடியும், தாம்பரத்தை பொறுத்தளவில் ரூபாய் 10.49 கோடியும் செலவாகும்.
4. ஐந்தாவது காவல் ஆணைய பரிந்துரையின்படி அனைத்து காவல் உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு 5 வருடத்திற்கு துணை ஒருமுறை ஒரு வார் காலத்திற்கு பணியிடைப் பயிற்சி வழக்கப்படும்
ஐந்தாவது காவல் ஆணைய பரிந்துரையின்படி அனைத்து காவல் உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறை ஒரு வார காலத்திற்கு பணியிடைப் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி இப்பணியாளர்களின் தரத்தினை மேம்படுத்திட உதவும்.
5. அனைத்து தமிழ்நாடு சிறப்பு காவல் அணிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரவிடுமுறை அளிக்கப்படும்.
காவல் துறையில் மற்றப்பிரிவுகளில் உள்ள காவல் பணியாளர்களைப் போலவே தமிழ்நாடு சிறப்பு காவல் அணிகளில் பணியாற்றும் காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்கப்படும்.
6. உயர் பதவிகளில் காவல் உள்ள துறை அதிகாரிகள் (துணை காவல் இருமடங்காக கண்காணிப்பாளர் முதல் காவல்துறை இயக்குநர் வரை) வழங்கும் பண வெகுமதி (money reward) உயர்த்தி வழங்குதல்.
ஐந்தாவது காவல் ஆணைய பரிந்துரையின்படி, தனிப்பட்ட காவலருக்கும், காவலர் குழு அளவிலும் துணை காஅவல் கண்காணிப்பாளர் முதல் காவல் துறை இயக்குனர் வரையிலான காவல் உயர் அதிகாரிகள் பண வெகுமதியினை வழங்கி வருகின்றனர். காவல்துறையினர் மேலும் சிறப்பாக வகையில் பணியாற்றிட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பண வெகுமதிக்கான வரம்பு பின்வருமாறு இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.