Watch Video: ‛மழையாவது வெள்ளமாவது... வா மாப்புள ஒரு கட்டிங் போடுவோம்’ சென்னையில் மழையில் ‛சியர்ஸ்’
மழை தண்ணீரில் பலரும் கடுப்பில் நடந்துக்கொண்டிருக்கையில், இரு மதுபிரியர்கள் தண்ணீரில் நின்றவாரு அனைவரும் பார்க்கும்படி மது குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் கனமழையால் மக்கள் மழைநீரில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில், மழைநீரின் நடுவில் நின்று ஹாயாக இருவர் மதுகுடிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியிருப்பதன் எதிரொலியாக சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் கனமழை கொட்டிவருகிறது. தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வரும் மழையால் தலைநகரம் தத்தளிக்கும் நகரமாக மாறியிருக்கிறது. மக்கள் அனைவரும் இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த மழையால் புறநகர் மற்றும் நகரத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும், சாலையோரத்தில் இருக்கும் ஆதரவற்ற மக்கள் மழையால் உணவி இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகளை தமிழ்நாடு அரசு வேகமாக செய்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து, உதவிகளையும் செய்து வருகிறார். இதனிடையே, மழை விட்டு விட்டு பெய்து வருவதால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஒவ்வொரு வரும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை ஆவது, வெள்ளம் ஆவது எங்களுக்கு அதெல்லாம் தெரியாது என்பது போல, தொடையளவு உள்ள மழை நீரில் மதுபிரியர்கள் மது குடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்த மழை தண்ணீரில் பலரும் கடுப்பில் நடந்துக்கொண்டிருக்கையில், இரு மதுபிரியர்கள் தண்ணீரில் நின்றவாரு அனைவரும் பார்க்கும்படி மது குடித்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Salute the Alcoholic Spirit of #Chennai.
— A Proud Indian (@Jaya20012) November 8, 2021
Whether it was #ChennaiRains #chennaifloods #ChennaiDrought, #Tasmac keeps some going.#தமிழன்டா pic.twitter.com/xwddfJLJMh
தொடர் மழை...வடியாத வெள்ளம்.. அல்லாடும் மக்கள்!https://t.co/iPMWFkgjBc
— ABP Nadu (@abpnadu) November 8, 2021
மேலும் செய்திகள் படிக்க:
1107 பேருக்குத் தங்குமிடம்.. சுமார் 3.5 லட்சம் உணவுப் பொட்டலங்கள்.. களத்தில் சென்னை மாநகராட்சி!https://t.co/5aRnL1qhUT#ChennaiCorporation #ChennaiRains2021
— ABP Nadu (@abpnadu) November 8, 2021
ஆளுயர ரெயின் கோட்...சிக் காஸ்ட்யூம்...கறுப்பு சிவப்பு தார் ஜீப்- மக்களுக்கு இந்த முதல்வர் புதுசு!@CMOTamilnadu @mkstalin @arivalayam https://t.co/SXThVwIqEa#CMMKStalin #TamilNaduRains #ChennaiRain
— ABP Nadu (@abpnadu) November 8, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்