புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: புஸ்ஸி ஆனந்த் மௌனம்! அனுமதி கிடைக்குமா? பரபரப்பு தகவல்!
விஜயின் 'ரோடு ஷோ'வுக்கு காவல்துறை அனுமதி மறுத்து விட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், 'மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை' என காவல் துறை விளக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ விறக்கு முதல்வரிடம் புஸ்ஸி ஆனந்த அனுமதி கோரிய நிலையில் கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் சிரித்தபடி நழுவிச் சென்ற தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ
புதுச்சேரியில் வருகிற 5-ந் தேதி ரோடு ஷோ நடத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். காலாப்பட்டில் தொடங்கி, கன்னியக்கோவில் வரையிலும் ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே மைக்கில் பேசவும் அனுமதி கேட்டு 3 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி த.வெ.க. நிர்வாகிகள் டி.ஜி.பி-யிடம் மனு அளித்தனர். தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கும்படி கோரினர்.
புதுச்சேரிக்கு தேதி குறித்த விஜய்
த.வெ.க. தலைவர் விஜய், மக்களைச் சந்திக்கும் வகையில் பல இடங்களில் 'ரோடு ஷோ' நடத்தி வந்தார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு, அவரது சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் சேலத்தில் பயணத்தைத் தொடங்க திட்டமிட்டபோது, காவல்துறை அனுமதி மறுத்ததோடு, ஒரு மாதத்துக்கு முன்பே மனு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. இந்நிலையில், வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக, கடந்த நவம்பர் 26ஆம் தேதி த.வெ.க. நிர்வாகிகள் புதுச்சேரி டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்தனர். முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்து மனு கொடுத்தனர்.
அனுமதி கிடையாது?
மூன்று நாட்களாகியும் காவல்துறை தரப்பிலிருந்து எந்த பதிலும் வராத நிலையில், நேற்று த.வெ.க. பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் ஆகியோர் டி.ஜி.பி.யைச் சந்திக்கச் சென்றனர்.
ஆனால், டி.ஜி.பி. டெல்லியில் நடக்கும் போலீஸ் மாநாட்டிற்காகச் சென்றுள்ளதாகவும், அவர் டிசம்பர் 1ஆம் தேதிதான் திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை!
இதையடுத்து, விஜயின் 'ரோடு ஷோ'வுக்கு காவல் துறை அனுமதி மறுத்து விட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. எனினும், 'மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை' என காவல் துறை வட்டாரங்கள் விளக்கம் அளித்தன.
விஜய் ரோடு ஷோ விறக்கு முதல்வர் ரங்கசாமி மற்றும் டிஜிபியிடம் புஸ்ஸி ஆனந்த அனுமதி கோரிய நிலையில் அனுமதி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் சிரித்தபடி நழுவிச் சென்றார்.
இறுதியாக, விஜய் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி அளிக்கப்படுமா என முதல்வர் ரங்கசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "புதுச்சேரி தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று அவர் பதிலளித்தார்.






















