TVK Vijay: திருச்சியிலிருந்து திரும்பிய விஜய்... காத்திருந்த அதிர்ச்சி செய்தி... மனவேதனையுடன் பதிவு
விருதுநகர் அருகே, கட்டனார்பட்டியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்

விருதுநகரில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கட்டனார்பட்டி பட்டாசு விபத்து:
விருதுநகர் மாவட்டம் கோவிந்தநல்லூரில் உள்ள கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் தொழிலாளர்கள் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பு வைக்கப்பட்டனர். மேலும், இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையின் நான்கு அறைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது
தலைவர்கள் இரங்கல்:
இந்த கோரமான வெடிவிபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர்;
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் நிகழ்ந்த ஒரு கோரமான விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
பிரதமர் மோடி:
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுவோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்:
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்:
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளேன்.
இதுகுறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்.
எடப்பாடி பழனிச்சாமி:
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகிவிட்டன. இதுகுறித்து நானும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை திமுக அரசு. மாறாக, பட்டாசு ஆலை என்ற பெயரில் ஒரு பளபளக்கும் அறையில் போட்டோஷூட் மட்டுமே எடுத்தார்.
இன்னும் சில நாட்களில் அமையவுள்ள அதிமுக அரசு இப்படியெல்லாம் ஏமாற்றாமல், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
விஜய் இரங்கல்:
இந்த நிலையில் பட்டாசு விபத்து குறித்து தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் விருதுநகர் அருகே, கட்டனார்பட்டியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து பூரண குணமடைய விழைகிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் மக்களுக்கான உண்மையான ஆட்சி அமைந்த உடன், பட்டாசுத் தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிவிட்டிருந்தார்.
மேலும் இந்த விபத்தில் நிகழ்ந்த மற்றோரு சோகம், மீட்பு பணிகளின் போது தீயணைப்புத்துறையினர் ஈடுப்பட்ட நிலையில் மீண்டும் வெடி விபத்து ஏற்ப்பட்டதில் தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது.
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
ட்ரெண்டிங் செய்திகள்























