மேலும் அறிய

TVK Vijay : விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு ; பச்சை கொடி காட்டிய போலீஸ்

விழுப்புரம் மாவட்ட காவல் துறையின் மூலம் கொடுக்கப்பட்ட 33 நிபந்தனைகளில் கட்டாயம் 17 நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டுமென விக்கிரவாண்டி டி.எஸ்.பி நந்தகுமார் மாநாட்டிற்கு அனுமதி அளித்துள்ளார்

விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழக மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடத்துவதற்கு விழுப்புரம் காவல் துறையின் மூலம் கொடுக்கப்பட்ட 33 நிபந்தனைகளில் கட்டாயம் 17 நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டுமென விக்கிரவாண்டி டி.எஸ்.பி நந்தகுமார் மாநாட்டிற்கு அனுமதி அளித்துள்ளார். 

தமிழக வெற்றிக்கழக மாநாடு

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநில மாநாட்டை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அருகேயுள்ள வி.சாலை பகுதியில் இம்மாதம் 23-ந் தேதி நடத்த இருப்பதாக முடிவு செய்திருந்தனர். 

இம்மாநாட்டுக்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை நடைமுறைப் படுத்துவதில் குறிப்பிட்ட நாட்கள் தேவைப்படும் என்பதால், ஏற்கனவே முடிவு செய்த தேதியில் மாநாட்டை நடத்துவது சிரமம் என்பதால் தேதி தள்ளிப்போனது. தொடர்ந்து, மாநாட்டை எந்த தேதியில் நடத்தலாம் என்று கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வந்தார்.

நடிகர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்குப்பிறகு தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் அக்டோபர் 27-ந் தேதி நடத்தப்படும் என்று நேற்று காலை நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த செய்தியை அக்கட்சியினர் மற்றும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மாநாடு நடத்துவதற்கு காவல் துறை சார்பில் அனுமதி பாதுகாப்பு வழங்ககோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் கட்சி நிர்வாகிகள் விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் கடந்த 21 ஆம் தேதி ஏ டி எஸ்பி திருமாலிடம் மனு அளித்திருந்தனர். இந்த் மனு மீதான பரிசீலனை செய்த காவல் துறை ஏற்கனவே மாநாடு நடத்த 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததில் சில தளர்வுகள் அளிக்கவேண்டுமென கேட்டிருந்தனர். அதன்படி மாநாடு 27 ஆம் தேதி நடத்துவதற்கு விக்கிரவாண்டி  டி.எஸ்.பி நந்தகுமார் அனுமதி அளித்துள்ளர். அனுமதி அளிக்கப்பட்டதில் கொடுக்கப்பட்ட 33 நிபந்தனைகளில் கட்டாயம் 17 நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

மாநாடு நடத்துவதற்கான அறிக்கையில் கூறியிருப்பதாவது... 

1.மாநாட்டு திடல் மேடை வாகனம் நிற்கும் நிறங்கள் வழித்தடங்கள் தேசிய நெடுஞ்சாலை இவற்றை உள்ளடக்கிய மாதிரி வரைபடம் இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

2. மாநாட்டிற்கு தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் பலரும் மாலை 4 மணிக்குள் மாநாட்டு திடலை வந்தடைய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

3. மூன்றாவது கேள்விக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது என பதிலளிக்கப்பட்டுள்ளது. 

4. மாநாட்டிற்கு வரும் அனைத்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறை தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என உறுதி கூறுகிறோம். 

5. மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்து வரும் மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் நபர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்படும் அத்துடன் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து வரும் பொதுமக்கள் தாங்களாகவே தேவையான வாகன வசதிகளை ஏற்பாடு செய்து கொண்டு ரயில் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வாயிலாக மாநாட்டிற்கு சிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 

6. பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாநாட்ட திடலில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

7. தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் தங்களாகவே தேவையான வாகன வசதிகளை ஏற்பாடு செய்து கொண்டு ரயில் பேருந்து உள்ளிட்ட பொதுமக்களின் இயல்பான மற்றும் பொது போக்குவரத்து வாயிலாக மாநாட்டிற்கு வந்து சிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஆகையால் மாநாட்டிற்கு வருபவர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு போக்குவரத்திற்கு போதிய போக்குவரத்து முன்னேற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். 

8. வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடாக வேறு இடம் விரைவில் தேர்வு செய்யப்பட்டு தங்களுக்கு தெரிவிக்கப்படும். 

9. பொதுமக்களின் இயல்பான வருகைக்கும், பெண்கள் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி மாநாட்டு திடல் பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டால் அனைவருக்கும் இடையூறாக அமையும் ஆகையால் வாகனம் நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடாக வேறு இடம் தேர்வு செய்ய வேண்டும். 

10. மாநாட்டு திடலில் நான்கு புறமும் ஸ்திரமான தடுப்புகள் அமைக்கப்பட்டு வடபுறம் இருந்து பொதுமக்கள் மேடைக்கு அருகில் செல்லாமல் இருக்கவும் வடபுறம் உள்ள நீர் நிலையை சுற்றியும் தகுந்த தடுப்புகள் அமைக்க ஆவண செய்யப்படும்.

11. மாநாட்டிற்கு குழந்தைகள் வருவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், பெரியோர்கள் ஆகியோருக்கு பிரத்தியாக இடம் ஒதுக்கி இருக்கையில் அமைக்கப்படும் மற்றும் பிரத்தியேகமான போதுமான அளவுக்கு கழிப்பறைகள் அமைக்கப்படும். 

12. எங்கள் கட்சியின் தலைவர் விழா மேடைக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக தடுப்புகளுடன் பிரதேயாக வழித்தடம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைக்கப்படும். 

13. மாநாட்டை திடலில் நான்கு புறமும் ஸ்திரமான தடுப்புகள் அமைக்கப்படும். மாநாட்டு திடலின் மேற்புறம் சென்னை - திருச்சி இருவழி ரயில் பாதை பக்கம் மாநாட்டை திடலில் இருந்து பொதுமக்கள் எவரும் செல்லாதவாறு தகுந்த தடுப்புகள் அமைக்கப்படும். 

14. மாநாட்ட திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள திறந்தவெளி விவசாயக் கிணறுகள் அடையாளம் காணப்பட்டு விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் தகுந்த தடுப்புகள் அமைக்க ஆவண செய்யப்படும்.

15. மின்வாரியத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஒத்துழைப்புடன் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆவண செய்யப்படும். 

16. பொதுப் போக்குவரத்து மூலமாக பொதுமக்கள் இயல்பாக மாநாட்டு திடலுக்கு செல்வதற்கும் வாகன நிறுத்துமிடத்திலிருந்து மாநாட்டு திடல் வரை செல்லும் பொது மக்களின் இயல்பான போக்குவரத்திற்கும் ஏதுவாக சாலையின் இருபுறமும் தகுந்த தடுப்புகள் அமைத்து வழித்தடம் அமைக்க ஆவணம் செய்யப்படும். 

17. பொதுமக்களின் இயல்பான போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் நலன் கருதி காவல்துறையின் உத்தரவுகளை முழு ஒத்துழைப்புடன் சிறப்பு கவனம் செலுத்தி உறுதியாக கடைபிடிக்கப்படும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2024:
"தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு?" - முதல்வர் ரேவந்த் ரெட்டி
ABP Southern Rising LIVE: வடக்கு தெற்கிற்கு செய்ய மறுக்கிறது - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
ABP Southern Rising LIVE: வடக்கு தெற்கிற்கு செய்ய மறுக்கிறது - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
Vijay TVK Maanadu: ”பத்திரமாக வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறேன்” - தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்
Vijay TVK Maanadu: ”பத்திரமாக வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறேன்” - தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்
போதைப்பொருள் கடத்தல் வழக்கு -  முன்னாள் டி.ஜி.பி. மகன் கைது!
போதைப்பொருள் கடத்தல் வழக்கு - முன்னாள் டி.ஜி.பி. மகன் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Rain Police : கண்டுகொள்ளாத மாநகராட்சி? சாக்கடை நீரில் இறங்கிய POLICE! உடனே ஓடிவந்த காவல்துறைTVK Maanadu : Vijay Maanadu | அம்பேதகர், பெரியார் நடுவில் விஜய்அண்ணா இடம்பெறாதது ஏன்? விஜய் மாஸ்டர் ப்ளான்Madurai People vs Ko Thalapathy | MLA-வை முற்றுகையிட்ட பெண்கள் திணறிய கோ.தளபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2024:
"தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு?" - முதல்வர் ரேவந்த் ரெட்டி
ABP Southern Rising LIVE: வடக்கு தெற்கிற்கு செய்ய மறுக்கிறது - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
ABP Southern Rising LIVE: வடக்கு தெற்கிற்கு செய்ய மறுக்கிறது - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
Vijay TVK Maanadu: ”பத்திரமாக வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறேன்” - தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்
Vijay TVK Maanadu: ”பத்திரமாக வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறேன்” - தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்
போதைப்பொருள் கடத்தல் வழக்கு -  முன்னாள் டி.ஜி.பி. மகன் கைது!
போதைப்பொருள் கடத்தல் வழக்கு - முன்னாள் டி.ஜி.பி. மகன் கைது!
காட்பாடி அருகே என்ஜின் இல்லாமல் வழியில் நின்ற பயணிகள் ரயில்; சீரமைப்பு பணி தீவிரம்!
காட்பாடி அருகே என்ஜின் இல்லாமல் வழியில் நின்ற பயணிகள் ரயில்; சீரமைப்பு பணி தீவிரம்!
TN Rain Alert: கரையை கடந்த டாணா புயல் -  பள்ளிகளுக்கு விடுமுறை, தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை - வானிலை அறிக்கை
TN Rain Alert: கரையை கடந்த டாணா புயல் - பள்ளிகளுக்கு விடுமுறை, தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை - வானிலை அறிக்கை
தொடங்கியது ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் நட்சத்திரங்கள்
தொடங்கியது ABP Southern Rising Summit 2024.. தென்னிந்தியாவை கொண்டாடும் நட்சத்திரங்கள்
மதுரை வரவேண்டிய இரண்டு விமானங்களும் வானில் வட்டமடித்தால் பரபரப்பு..
மதுரை வரவேண்டிய இரண்டு விமானங்களும் வானில் வட்டமடித்தால் பரபரப்பு..
Embed widget