மேலும் அறிய

விஜய் கட்சியை வம்புக்கு இழுத்த இபிஎஸ்! உடனடியாக தவெக ஐடி விங் கொடுத்த பக்கா பதிலடி!

தவெகவை துஷ்ட சக்தி என்று விமர்சித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கைக்கு அக்கட்சியின் ஐடி விங்க் தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

'திராவிட மாடல்' என்று கூறி ஆட்சி நடத்திய திமுக-வைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி த.வெ.க. அரசுக்கு கண்டனம்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தவெக ஐடி விங்க் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளது.

அதில், ‘கட்சியையே ஆட்சி அதிகாரப் பசிக்காக அடகு வைத்து, கைகளாலும் கால்களாலும் நடந்து தவழ்ந்து, பதவியை ருசித்தவர்கள், மனசாட்சி உள்ள மக்களாட்சிக்குப் பாடம் எடுப்பது, ‘சாத்தான் சத்தியம் பேசுவது போல’ இருக்கிறது.

மக்கள் தீர்ப்பை ஏற்க இயலாமல், இரவோடு இரவாக இருட்டிலே மறைந்து மறைந்து பதுங்கிப் பதுங்கிச் சென்று பேசி, திருட்டுத்தனமாக ஆட்சி அமைக்க முயன்று தோற்றவர்கள், தூய அரசியல் பற்றிப் பேசுவது ‘குற்றவாளியே தீர்ப்பு எழுதுவது போல’ இருக்கிறது.

சத்தியவான் இடர்பாடி ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் சம்பவத்தை மறந்துவிடுமா தமிழகம்? அப்படி இருக்கையில், எந்தக் குற்றம் என்றாலும் உடனடி நடவடிக்கையைத் துரிதப்படுத்தும், மக்கள் விரும்பும் ஆட்சி மீது களங்கம் சுமத்துவது, ‘ரத்தக் கறை படிந்த பற்களை மறைக்க முடியாமல் மறைத்துக்கொண்டு சிரிப்பது போல’ இருக்கிறது.

திரும்பத் திரும்பச் சொல்கிறோம். தீர்ந்துபோன சக்தி திருந்தும் வரையிலும் சொல்லுவோம். சினிமா வெற்றி பற்றியோ, சினிமா வெளிச்சம் பற்றியோ, சினிமா புகழ் பற்றியோ இழிவாகப் பேசும்போது, புரட்சித் தலைவரையும் ஜெயலலிதா அம்மையாரையும் தீர்ந்துபோன சக்தி வேண்டுமென்றே இழிவுபடுத்துவது போலத்தான் இருக்கிறது. அதில் மாற்றமே இல்லை. இது, எம்.ஜி.ஆரின் அப்பழுக்கற்ற தொண்டர்களே ஆழமாக உணர்ந்த ஒன்று. இடர்பாடிக்குப் புரியும் வகையில், பழமொழியாகச் சொல்ல வேண்டும் எனில் இது, ‘மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போல’ இருக்கிறது.

லஞ்சமற்ற, ஊழலற்ற, நேரடியாக மக்களுடன் மக்களாகக் களமிறங்கிக் களமாடும், மக்கள் விரும்பும் தமிழ்நாடு முதல்வரை, விஷக் காளான்கள் எல்லாம் விமர்சிப்பதை மக்கள் கவனித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்குத் தக்க பதிலடியைச் சரியான தருணத்தில் தமிழக மக்களே தருவார்கள் என்பதை இடர்பாடி என்றும் மறந்துவிட வேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
மதுரை காந்தி அருங்காட்சியகம்: விரைவில் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மதுரை காந்தி அருங்காட்சியகம்: விரைவில் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
Embed widget