மேலும் அறிய

"எல்லோருக்குமான அரசா? வெட்கக்கேடு" - முதல்வர் விஜய்யை விளாசிய தினகரன்

மக்களின் குரலை கேட்பது தான் மக்களாட்சி அவர்களின் குரலை ஒடுக்க முயல்வது கொடுங்கோல் ஆட்சி - டிடிவி தினகரன்

பணிநிரந்தரம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று போராடவிருந்த பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

பணி நிரந்தரம், தற்செயல் விடுப்பு, பணி மாறுதல் கலந்தாய்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பாக போராடவிருந்த பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு அனுமதி மறுத்து அவர்களை ஆங்காங்கே வீட்டுக் காவலில் அடைத்து வைத்ததோடு, அதனை மீறி போராட வந்தவர்களை குண்டுக்கட்டாக கைதுசெய்திருக்கும் காவல்துறையின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான போராட்டத்தின் மூலமாக தங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்ற பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களை குற்றவாளிகளை போல சித்தரித்து அவர்களை வீட்டுக் காவலில் வைத்தும், கைது செய்திருப்பதும் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும்.

 

தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் தொடங்கி விவசாயிகள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மின்சாரத்துறை பணியாளர்கள் என அனைவரும் நாள்தோறும் தங்களின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தவெக அரசு அனைத்து தரப்பு மக்களுக்கான அரசு என முதலமைச்சர் ஜோசப் விஜய் பெருமை பேசிக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது. போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதிநிதிகளை வீட்டுக் காவலில் அடைப்பது, காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையை ஏவுவது என தவெக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்துமீறல்களும், அராஜகப் போக்குகளும் நாம் தமிழகத்தில் தான் வாழ்கிறோமோ அல்லது அடிமை நாட்டில் வாழ்கிறோமோ என்ற சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை உடனடியாக விடுவிப்பதோடு, கைது செய்யப்பட்டவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர முன்வர வேண்டும் என மருத்துவத்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

"முகம் கேவலமா இருக்கு" கேலி செய்த சக தொழிலாளியை கொடூரமாக தீர்த்துக் கட்டிய நபரால் பரபரப்பு
டாக்டர் அம்பேத்கர் விருது 2026-27: சமூகப் பணியாளர்களுக்கு அரிய வாய்ப்பு... விண்ணப்பிக்க அழைப்பு !
டாக்டர் அம்பேத்கர் விருது 2026-27: சமூகப் பணியாளர்களுக்கு அரிய வாய்ப்பு... விண்ணப்பிக்க அழைப்பு !
இப்படி ஒரு எம்எல்ஏவா! சற்றும் யோசிக்காமல்...நெகிழ்ச்சியில் மக்கள் - அப்படி என்ன செய்தார்?
இப்படி ஒரு எம்எல்ஏவா! சற்றும் யோசிக்காமல்...நெகிழ்ச்சியில் மக்கள் - அப்படி என்ன செய்தார்?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Embed widget