மேலும் அறிய

மொழிப்போர் தியாகிகள் நினைவு ஸ்தூபி அருகே திமுக பேனர்கள் - அதிமுக எதிர்ப்பு

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாட்டில் மொழிப் போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி, சிவகங்கை ராஜேந்திரன் என பலர், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்களது உயிரை நீத்துள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் 1960-களில்தான் உச்சத்தை எட்டினாலும், 1930 களிலேயே எதிர்ப்பு தொடங்கிவிட்டது. அனைத்து பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 1938 ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில் போராட்டம் வெடித்தது.

மொழிப்போர் தியாகிகள் நினைவு ஸ்தூபி அருகே திமுக பேனர்கள் - அதிமுக எதிர்ப்பு

போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற நடராசன், உடல்குன்றி சென்னை சிறையில் உயிரிழந்தார். மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி அவர்தான். அதைத் தொடர்ந்து கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்துவும் சென்னை சிறையில் உயிர் நீத்தார். நடராசன், தாளமுத்துவின் உயிரிழப்பை தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்ததால், இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணை 1940 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், 1965 ல் இந்திய ஆட்சிமொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்று, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தலைமையிலான காங்கிரஸ் அரசின் அறிவிப்பால், மீண்டும் போராட்டம் உருவானது. அப்போது அண்ணா தலைமையில் தி.மு.க.வின் போராட்டம் உக்கிரமானது. இதில், தீக்குளித்தும், குண்டடிப்பட்டும் மாணவர்கள், இளைஞர்கள் பலர் உயிரைவிட்டனர்.

மொழிப்போர் தியாகிகள் நினைவு ஸ்தூபி அருகே திமுக பேனர்கள் - அதிமுக எதிர்ப்பு

போராட்டத்தால் நெருக்கடி அதிகரிக்கவே, வேறு வழியின்றி இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரும் என்ற முடிவுக்கு காங்கிரஸ் அரசு வந்தது. இதனால் மாணவர்களின் 50 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தின் தாக்கத்தால், 1967-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 50 ஆண்டுகளாக தொடர்ந்து திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்து வருகிறது.

மொழிப்போர் தியாகிகள் நினைவு ஸ்தூபி அருகே திமுக பேனர்கள் - அதிமுக எதிர்ப்பு

இந்நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சாரங்கபாணி 1965 -இல் கல்லூரி வளாகத்திலேயே இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்மீது தீ வைத்து கொண்டு உயிர் நீத்தார்.  அவரது நினைவைப் போற்றும் வகையில், அக்கல்லூரி வாயிலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இன்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை  முன்னிட்டு, மன்னம்பந்தலில் உள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் நாம் தமிழர் கட்சியினர், மதிமுக, திருக்குறள் பேரவை, தமிழர் தேசிய முன்னணி, தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் காலை முதல் தொடர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

மொழிப்போர் தியாகிகள் நினைவு ஸ்தூபி அருகே திமுக பேனர்கள் - அதிமுக எதிர்ப்பு

திமுக சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக நினைவு ஸ்தூபி அருகில் கட்சி கொடி நடப்பட்டும் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து கட்சியினரும் அஞ்சலி செலுத்தும் இடத்தில் உள்ள திமுக கொடியையும் பேனரையும் அப்புறப்படுத்தினால்தான் அஞ்சலி செலுத்துவோம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல்துறையினரின் அறிவுறுத்தியதன் பேரில் அப்பகுதி திமுக பொறுப்பாளர்கள் திமுக பேனர் மற்றும் கட்சி கொடியை அகற்றினர். 

மொழிப்போர் தியாகிகள் நினைவு ஸ்தூபி அருகே திமுக பேனர்கள் - அதிமுக எதிர்ப்பு

தொடர்ந்து  மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில்  மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில்  முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் பங்கேற்று  மலர் வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மொழிப்போர் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி சாரங்கபாணி நினைவு  ஸ்தூபியில் அதிமுகவினர் வீரவணக்கம் செலுத்தினர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
Puducherry Power Cut (09.07.2026): புதுச்சேரியில் இன்று மின் தடை! உங்க ஏரியா இருக்கா?
Puducherry Power Cut (09.07.2026): புதுச்சேரியில் இன்று மின் தடை! உங்க ஏரியா இருக்கா?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Cuddalore power cut: கடலூரில் இன்று மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
Embed widget