மேலும் அறிய
Advertisement
Today's Headlines: ரூ. 105 கடந்த பெட்ரோல் விலை... இந்திய அணி தோல்வி...94 வது ஆஸ்கர் விருது விழா...இன்னும் பல!
Today's Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழ்நாட்டில் வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக அரசு முனைப்புடன் உள்ளது : தொண்டர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்
- அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை : எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
- பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சென்னை ஐஐடி மாணவி : 3 முறை தற்கொலைக்கு முயன்றதால் அதிர்ச்சி
- தமிழ்நாட்டில் 105 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது பெட்ரோல் விலை
- சென்னையில் 2021 ஆகஸ்ட் 19 முதல் 2022 மார்ச் 26 வரை 22, 941 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
- சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்துக்கு மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
- தமிழ்நாட்டில் 5 இடங்களில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியா :
- மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியர்களின் திறன் உலகின் அனைத்து இடங்களையும் சென்றடைந்துள்ளதாக கூறினார்.
- 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் அனைத்து நாடுகளுக்கும் விமான சேவை தொடங்கியது.
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,421 ஆக குறைந்துள்ளது.
- ஆந்திரா: திருப்பதி அருகே பாகார்பேட்டையில் 50 அடி பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் :
- 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
- மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தமாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருந்ததாக நெதர்லாந்து விஞ்ஞானிகள் முதன் முதலாக கண்டுபிடித்துள்ளனர்.
- ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் நீடிக்க முடியாது என அமெரிக்க அதிபர் கருத்துக்கு ரஷ்யா கண்டனம்
விளையாட்டு :
- சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
- உலககோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
- மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion