(Source: ECI/ABP News/ABP Majha)
கரூர்: பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- விவசாயிகள் மகிழ்ச்சி
அமராவதி ஆற்றுப் பகுதியில் தொடர் மழை காரணமாக கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமராவதி ஆற்றுப் பகுதியில் தொடர் மழை.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு தண்ணீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 501 கனஅடி தண்ணீர் அணையிலிருந்து வந்து கொண்டிருந்தது. இதில் 488 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்பட்டது. இன்று அணைக்கு நீர்வரத்து 363 கனஅடி உள்ளது. இதனால் தற்போது அணையில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளியேற்றம். இதைத்தவிர சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு இருகரைகளையும் தண்ணீர் தொட்டுக்கொண்டு செல்கிறது. ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு இன்று காலை நிலவரப்படி 1057 கன அடி தண்ணீர் வரத்து. இதனை அப்பகுதி பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து நிலவரம்.
காவிரி ஆற்று மாயனூர் கதவணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5,370 கனஅடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் டெல்டா பாசன சம்பா சாகுபடி பணிக்காக ஆற்றில் 4,450 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு 920 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. மாயனூர் கதவனைக்கு இன்று காலை நிலவரம் படி 12,420 கனஅடி தண்ணீர் வரத்து. அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேலும், தொடர் மழை காரணமாக மாயனூர் கதவனுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நங்காஞ்சி ஆற்றின் நீர்வரத்து நிலவரம்.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி ஆற்றுக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து இரண்டு பாசனைகளை வாய்க்காலில் தலா 10 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 39.37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 39.37 அடியாகவே உள்ளது.
ஆத்துப்பாளையம் அணையின் தற்போதைய நீர்வரத்து நிலவரம்.
க.பரமத்தி அருகே உள்ள கார்விழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து 31 கனடியாக இருந்தது. இந்நிலையில் 29.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 26.50 அடியாக உள்ளது. மேலும், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் 51 கன அடி திறக்கப்பட்டுள்ளது. இன்று அணையின் நீர்வரத்து 41 கன அடி தண்ணீராக உள்ளது. மேலும் தற்போது அணையில் 60 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பொன்னனியாறு அணையின் தற்போதைய நீர் நிலவரம்.
கடவூர் அருகே உள்ள பொன்னனியாறு அணைக்கு நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. இதனால் 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 27.90 அடியாக உள்ளது. தமிழகத்தில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதலே சாரல் மழை செய்து வருகிறது.